தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கு பார்ப்பதற் கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தெலுங்கு தாண்டியும் மற்ற மொழி ரசிகர்களிடமும் பிரபலமானவர்.
தெலுங்கு மாநிலத்தில் வசிக்கும் அல்லு அர்ஜுன் ஆரம்பகாலத்தில் சென்னையில்தான் வளர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் சென்னையிலேயே வாழ்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய வீடு டி நகர் தான் எனவும் நான் ஒரு டீ நகர் பையன் எனவும் கூறியுள்ளார்.
20 வருடங்கள் சென்னையில்லிருந்து உள்ளதால் தெலுங்கு பேசுவது போலவே தமிழிலும் சரளமாக பேசக்கூடியவர். இவருடைய நண்பர்கள் எல்லாருமே சென்னையில் தான் உள்ளனர்.

சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ் இவருடன் பணியாற்றுவதற்கு ஆவலாக இருப்பதாகவும் பலமுறை கூறியுள்ளார். அது நடக்கவும் போகிறதாம். ஆண் முருகதாஸ் சொன்ன ஒன் லைன் மிகவும் பிடித்துள்ளதாம் (ஆனா அந்த ஒன் லைன் மட்டும்தான் நல்ல இருக்கும்னு அவருக்கு புரியல). அதுமட்டுமில்லாமல் தனுசுடன் நடிப்பும் வெற்றிமாறனின் இயக்கமும் தன்னை கவர்ந்ததாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.
சினிமாவிலேயே நடனத்திலும் நடிப்பிலும் எனக்குப்பிடித்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் என தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அல்லு அர்ஜுன் விரைவில் தமிழில் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுனை பொருத்தவரை அம்மா,மனைவி, பொண்ணு மற்றும் பையன் இவர்களை விட எனக்கு அப்பாதான் பிடிக்குமென தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய வாழ்க்கையையே தன்னுடைய ரசிகர்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.