டாப் 10 சீரியல் பிரபலங்களின் லிஸ்ட்.. ரோஜா, பாக்கியாவை பின்னுக்குத் தள்ளிய கண்ணம்மா

வெள்ளித்திரை போன்றே சின்னத்திரை பிரபலங்களுக்கும் தனி தனி ரசிகர் கூட்டம் இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள டாப் 10 சின்னத்திரை பிரபலங்களின் லிஸ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் முதல் இடத்தை பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்துக்கொண்டிருக்கும் வினுஷாதேவி பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடித்த ரோஷனி, ரசிகர்களிடம் கண்ணம்மாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். எனவே கண்ணம்மா கேரக்டரின் நடிகை மாறினாலும் கண்ணம்மா கதாபாத்திரம் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசி மேற்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கும் பாக்யா கதாபாத்திரம் ரசிகர்களின் இஷ்டமான கதாபாத்திரமாக மாறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து ரோஜா சீரியலின் கதாநாயகன் அர்ஜுன் 4-ஆம் இடத்தையும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரம் ஐந்தாம் இடத்தையும், 6-ஆம் இடத்தை அதே சீரியலில் தனம் கதாபாத்திரமும் பிடித்துள்ளது.

மேலும் 7-வது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகி பார்வதிக்கும் கிடைத்திருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து 8-வது இடத்தை புரட்சிகர பெண்ணாக இந்த நவீன காலகட்டத்தில் சித்தரித்திருக்கும் சன் டிவியின் சுந்தரி சீரியலின் கதாநாயகி சுந்தரிக்கும், 9-வது இடம் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் பாரதிக்கும் கிடைத்துள்ளது.

அதைப்போல் 10-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வாறு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள 10 பிரபலங்களின் லிஸ்ட் தற்போது சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் இருவரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்து இருப்பது கூடுதல் சிறப்பு. ஏனென்றால் சீரியலில் ஒருத்தரை மட்டுமல்லாமல் அதில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் அணுஅணுவாக ரசித்து கொண்டிருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

Next Story

- Advertisement -