வெள்ளித்திரை போன்றே சின்னத்திரை பிரபலங்களுக்கும் தனித் தனி ரசிகர் கூட்டம் இருந்துகொண்டிருக்கிறது. எனவே அவர்களை அங்கீகரிக்கும் விதமாக ‘ஆர்மிக்ஸ் கேரக்டர்ஸ் இந்தியா லவ்ஸ்’ என்ற நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடைந்த சின்னத்திரை நடிகர் நடிகைகளில் யார் மக்களின் மனதை அதிகமாக கவர்ந்துள்ளார்ளோ அவர்களில் 2021 ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறது.
முதலில் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமடைந்து மக்களை கவர்ந்த கதாபாத்திரங்களின், விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக அறிமுகமாகி பின்னர் ‘குக் வித் கோமாளி’ யின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சிவாங்கி மக்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு, அது இது எது, போன்ற விஜய் டிவியின் பல காமெடி ஷோக்களில் கலக்கி தற்பொழுது குக் வித் கோமாளி மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் புகழ். குக் வித் கோமாளி சீசன்2 ஷோ மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் டாப் 3ல் இடம்பிடித்துள்ளார். இவர் சூப்பர் சிங்கர் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையில் அருமையாக தொகுத்து வழங்கியதால் இந்த மூன்றாம் இடத்தை பிடித்து கலக்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து இவருடன் சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான ‘நீயா நானா’ கோபிநாத் டாப் 5 இடத்தைப் பிடிக்கிறார் .
இவர்களைத் தொடர்ந்து சீரியல்களில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்த பிரபலங்களின் வரிசையில், விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மக்களை கவர்ந்து முதலிடத்தை தட்டி செல்கிறது.
இரண்டாவதாக சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரமும், அதே சீரியலில் கதாநாயகன் அர்ஜுன் கதாபாத்திரம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் குடும்பத்தலைவியாக பாக்கியலட்சுமி கதாபாத்திரம் நான்காம் இடத்தையும், மீண்டும் சன் டிவியின் சுந்தரி சீரியலில் சுந்தரி கதாபாத்திரம் ஐந்தாம் இடத்தையும் பெற்று அசத்தியுள்ளன.