வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் 10 பிரபலங்கள்.. என்டர்டைன்மென்டில் பிச்சு உதறும் புகழ்

Most Popular Serial Celebrity: சினிமாவிற்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் என்டர்டைன்மெண்ட் ஷோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனுதினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களின் மூலம் பாப்புலரான 5 பிக்சன் கேரக்டர்ஸ் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

இதில் 5-வது இடத்தை  ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் கதாநாயகன் கார்த்திக் பிடித்து இருக்கிறார். இவர் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் இளசுகளில் மனதைக் கவர்ந்து,அதன் பின் செம்பருத்தி  சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் இஷ்டமான கதாநாயகனாக மாறினார். அதன் பிறகு இப்போது கார்த்திகை தீபம் என்ற சீரியலில் கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சீரியல் நடிகை என ஒதுக்கிய ஹீரோக்கள்.. தேடி வர வைத்து முகத்தில் கரியை பூசிய வாணி போஜன்

அதன் தொடர்ச்சியாக 4-வது இடம் சுந்தரி சீரியல் கதாநாயகி சுந்தரிக்கு கிடைத்துள்ளது. இவருடைய எதார்த்தமான நடிப்பு ஆக்ரோஷமான கோபம் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். 3-வது இடம்  டிஆர்பி-யில் ரவுண்ட் கட்டும் எதிர்நீச்சல் சீரியலின் கதாநாயகி ஜனனி பெற்றிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி  சீரியலில் பாக்யா கேரக்டரில் நடிக்கும் சுசித்ராவிற்கு 2-வது இடமும் சன் டிவியில் கயல் சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டும் கதாநாயகி கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டி முதலிடத்தில் பிடித்து மாஸ் காட்டுகிறார்.

Also Read: முல்லை மூலமாக கதிருக்கு தெரியவரும் உண்மை.. கிளைமேக்ஸ்க்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ்

இவ்வாறு சீரியல்களை பொறுத்து பேமஸ் ஆக இருக்கும் ஐந்து நடிகர் நடிகைகளின் லிஸ்ட்டை தொடர்ந்து. நான் பிக்சனிலும் பிரபலமாக இருக்கும் ஐந்து நடிகர் நடிகைகளின் பட்டியலும் வெளிவந்துள்ளது. இதில் 5-வது இடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் பாலாவிற்கும், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்கும் சிவாங்கிக்கு 4-வது இடமும் கிடைத்துள்ளது

இது மட்டுமல்ல நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக தொகுத்து வழங்கி கெத்து காட்டிக் கொண்டிருக்கும் கோபிநாத் 3-வது இடத்திலும் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிரியங்காவிற்கு 2-வது இடமும் கிடைத்துள்ளது.

Also Read: லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்

இதன் தொடர்ச்சியாக முதல் இடத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த புகழ் தான் பிடித்திருக்கிறார். இவ்வாறு நான்பிக்சனில் மிகவும் பாப்புலராக இருக்கக்கூடிய ஐந்து பிரபலங்களின் லிஸ்டில் மற்ற எந்த சேனலை சேர்ந்த பிரபலங்களும் இடம்பெறாமல் விஜய்  டிவியின் செல்ல பிள்ளைகளே இடம் பெற்று, மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாக நிற்கின்றனர்.

Trending News