Vettaiyan: லைக்கா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள வேட்டையன் நாளை ரிலீஸ் ஆகிறது. ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் அமிதாப்பச்சன் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதுவே பெரும் ஆவலை ஏற்படுத்திய நிலையில் படத்தின் பிரீ பிசினஸ், டிக்கெட் புக்கிங் என எல்லாமே தாறுமாறு லாபம் தான். மேலும் படத்தின் மொத்த வசூல் 500 கோடியை நெருங்கும் என்கின்றனர். இதை வைத்து லைக்கா பல நஷ்டங்களை ஈடுகட்ட பிளான் செய்திருக்கிறது.
அந்த வகையில் எப்போதுமே தலைவர் படம் வெளியாகிறது என்றால் ஊரே கோலாகலமாக இருக்கும். அப்படித்தான் நாளைய தினத்தை திருவிழாவாக கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
மூடப்படுகிறதா உதயம் தியேட்டர்.?
இது ஒரு புறம் இருக்க வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்த கையோடு பிரபல திரையரங்கம் மூடப்படுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதன்படி சென்னைக்கு முக்கிய அடையாளமாக இருக்கும் உதயம் தியேட்டரை இடிக்கப் போவதாக சில மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
அதில் தற்போது வேட்டையன் தான் கடைசி படம் என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இது குறித்து விசாரித்ததில் உதயம் திரையரங்கின் மேலாளர் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதன்படி இப்படி ஒரு தகவல் பரவுவது முற்றிலும் உண்மை கிடையாது வதந்தி தான்.
வேட்டையன் மட்டுமில்லாமல் தீபாவளிக்கு வெளியாகும் அமரன் படத்தை கூட நாங்கள் திரையிட இருக்கிறோம். உதயம் தியேட்டர் மூடப்படுமா என்பது குறித்த உறுதியான செய்தி தெரிவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். அதனால் தற்போது பரவி இருக்கும் தகவல் புரளி தான் என தெரிவித்துள்ளார்.