ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்த ஆண்டு Google-ல் அதிகமாக Search செய்யப்பட்ட 6 படங்கள்

2024 ஆம் பல படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் கொடுத்துள்ளது. பல தரமான படைப்புகள் வந்துள்ளது. முக்கியமாக தமிழில் அரண்மனை 4, ராயன், அமரன், Goat, வேட்டையன், கங்குவா, மகாராஜா என்று அடுத்தடுத்த 100 கோடி தாண்டி வசூல் செய்த படங்கள் வந்திருந்தது. மேலும் முக்கியமாக மகாராஜா படம் சீனாவில் திரையிடப்பட்டு வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இப்படி இருக்க, இந்த வருடம், Google-ல் அதிகம் search செய்யப்பட்ட படங்கள் என்னவென்று பார்க்கலாம்..

ஸ்திரீ 2: ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்திரீ 1 படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படம் உருவானது. இந்த படம் ஹாட்ஸ்டார்-ல் உள்ளது. மேலும் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. திகில் கலந்த காமெடி படமாக உருவான ஸ்திரீ 2 ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக உள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ்: இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு பான் இந்தியா அளவில் பயங்கரமான வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக குணா படத்தின் Reference தமிழ் audience மத்தியில் பிரபலமடைந்து படத்தை கொண்டாடினார்கள். இந்த படமும் இந்த ஆண்டு google-ல் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.

லாபட்டா லேடீஸ்: இந்த படம் ஒரு தரமான படைப்பாகவும் அதே நேரத்தில் ஆஸ்கார்-க்கு பரிந்துரைக்க பட்ட படமாகவும் உள்ளது. ஒரு சாதாரண கதையை சிறந்த திரைக்கதை மூலமாக அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி கொண்டு சேர்த்துதான், இந்தியாவில் இன்றளவும் நீடிக்கும் ஒரு பாரம்பரியத்தில் இருக்கும் ஆபத்தையும் எடுத்துரைத்திருப்பார்கள்.

12th Fail: இந்த படம் மிடில் கிளாஸ் வாழக்கையில் இருக்கும் அனைவருக்குமே Connect ஆனதால், படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஒரு மனிதனால் இப்படியான கஷ்டத்திலும் படிக்க முடியுமா என்ற வியப்பை கொடுத்ததோடு, பலருக்கு ஒரு inspiration ஆக இந்த படம் உள்ளது.

மகாராஜா: சீனாவில் தற்போது சக்க போடு போட்டுகொண்டு இருக்கும் இந்த படம் இதுவரை 150 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் இடம் பெரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த படமும் OTT-யில் ரிலீஸ்ஆன பிறகு, பலர் Google-ல் சர்ச் செய்துள்ளார்கள்.

Goat: விஜய் நடிப்பில் அவரது 68 ஆவது படமாக உருவான இந்த படத்தில், ஏராளமான கேமியோ ரோல் இருந்தது. அதுவே இந்த படத்துக்கு ஒரு பலமாக மாறியது. பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, திரிஷா, சிவகார்த்திகேயன் தல reference என்று ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியலாக உருவானது. மேலும் இந்த படம், OTT-யில் வெளியான பிறகும், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Trending News