Actor Prakashraj: படத்தில் சண்டை காட்சிகளுக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், படத்தின் ஒரு இடத்தில் கூட சண்டை காட்சி இடம் பெறாமல் கதையை மட்டுமே கொண்டு வெற்றி கண்ட படங்கள் தமிழ் சினிமாவில் உண்டு.
அவ்வாறு கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மக்களின் எதிர்பார்ப்பை பெற்று தந்த படங்களை பற்றிய இங்கு காண்போம். 2004ல் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த படம் தான் அழகிய தீயே. இப்படத்தில் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும்.
Also Read: கவர்ச்சியை மட்டுமே வைத்து தூண்டில் போடும் 5 நடிகைகள்.. கண்ணா பின்னானு அலையும் பூஜா ஹெக்டே
இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. 2007ல் ஜோதிகாவின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெற்றி கண்ட படம் தான் மொழி. தன்னிடம் இருக்கும் குறையை வெளிகாட்டாமல் எதிர்கொள்ளும் செயலில் சிறப்புற நடித்திருப்பார் ஜோதிகா.
2008ல் பிரகாஷ் ராஜ், திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் அபியும் நானும். பெண் குழந்தையின் பாசத்தை மையமாகக் கொண்டு, சிறந்த தந்தையாக சிறப்புற நடித்திருப்பார் பிரகாஷ்ராஜ். 2015ல் மணிகண்டன் இயக்கத்தில் ஏழ்மையை வெளிப்படுத்தும் கதையில் வெளிவந்து மக்களின் பேராதரவை பெற்ற படம் தான் காக்கா முட்டை.
Also Read: விஜய்யை ஆட்டி படைக்கும் அந்த பெரும்புள்ளி.. தலையாட்டி பொம்மை போல் சொன்னதைச் செய்யும் தளபதி
2011ல் விக்ரம் இன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளிவந்த படம் தான் தெய்வ திருமகள். மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் விக்ரம். இப்படம் மக்களிடம் பேராதரவை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 2012ல் நட்பை போற்றும் விதமாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் நண்பன்.
அதைத்தொடர்ந்து 2012ல் நகைச்சுவையை மையமாகக் கொண்டு வெளிவந்த படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு இப்படம் அடுத்த கட்ட வாய்ப்புகளை பெற்று தந்தது. இது போன்ற படங்களில் எந்த ஒரு சண்டை காட்சிகளும் இடம் பெறாமல் தன் கதையை கொண்டு வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்