கிரிக்கெட் வீரர்கள் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி அனைத்திலும் வெற்றி கண்டு எப்படியாவது உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பதுதான் பல கிரிக்கெட் வீரர்களின் ஆசையாகவே இருக்கும். இதனால் அனைத்து போட்டிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியும் உலக கோப்பை போட்டியில் விளையாடாத வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
அலிஸ்டர் குக்: இங்கிலாந்து அணி வீரரான அலிஸ்டர் குக் 92 ஒருநாள் போட்டிகளிலும் அதில் 62 ஒருநாள் போட்டியில் அணித் தலைவராகவும் விளையாடியுள்ளார். 11000 ரன்களுக்கு மேல் எடுத்த அலிஸ்டர் குக் இதுவரைக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.
விவிஎஸ் லக்ஷ்மன்: இந்திய அணியில் விவிஎஸ் லக்ஷ்மன் இதுவரைக்கும் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 8781 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரைக்கும் இவர் 281 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எப்போதுமே ஆப்பு வைக்க கூடிய இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது விவிஎஸ் லக்ஷ்மன் தான்.
அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா போட்டியில் அனைத்திலுமே விவிஎஸ் லக்ஷ்மன் வெறித்தனமாக ஆடி ரன்களை குவித்து விடுவார். இவர் களத்தில் இறங்கினால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் கண்கலங்கி விடுவார்கள் அந்த அளவிற்கு வெறித்தனமாக விளையாடி ரன்களை குவிப்பதில் விவிஎஸ் லக்ஷ்மன் வல்லவர்.
ஐஸ்டின் லாங்கர்: ஆஸ்திரேலியா அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் வெறும் 8 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை ஆனால் 14 வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார்.இதுவரைக்கும் 45 சராசரி வீதம் வைத்துள்ள இவர் உலக கோப்பை போட்டியில் விளையாடவில்லை.
மத்தியூ ஹாக்கர்: இங்கிலாந்து அணியில் சிறந்த 10 பந்துவீச்சாளர்களுள் இவருக்கும் ஒரு இடம் உண்டு. அந்த அளவிற்கு மிகவும் திறமையாக பந்து வீசுவார் 67 டெஸ்ட் போட்டியில் விளையாடி 248 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார் ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்க வில்லை. அதனால் உலக கோப்பை போட்டியில் விளையாட கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
மேற்கண்ட கிரிக்கெட் வீரர்கள் பல திறமைகள் இருந்தும். இதுவரைக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாடுவது கனவாகவே இருந்துள்ளது.