திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

நெட்ஃபிக்ஸ்-ல் அதிகம் பார்க்கப்பட்ட படம்.. 100 நாள் கடந்தும் கெத்து காட்டும் சேதுபதி

தமிழ்த் திரையுலகில் சாதாரண பாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தைப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது திரைப்படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 14 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. நெட்ஃபிக்ஸ் ott தளம் இந்த படத்தை பல கோடி கொடுத்து வாங்கியது. வாங்கியதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. ott-க்கு மகாராஜா வந்ததுக்கு பிறகு, மக்கள் இந்த படத்தை பார்த்து பிரம்மிப்பு அடைந்துள்ளனர்.

விஜய் சேதுபதி வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியின் பெயர் லக்ஷ்மி. திடீரென ஒருநாள் அந்த குப்பை தொட்டி திருடுபோனதாக மகாராஜா கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதி போலீஸிடம் கூறுகிறார். குப்பைத் தொட்டியைக் கண்டுபிடித்து தருமாறு காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறார்.

ஆனால் இதை நம்ப மறுக்கும் காவல்துறை, அதன்பின்பு இந்த திருட்டு வழக்கை விசாரிக்க தொடங்குகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என்றே சொல்லலாம். ரூ.20 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது மட்டுமின்றி, ott-யிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக திரையரங்குகளில், நல்ல வரவேற்பு பெரும் படங்கள், ott-யில் சரியான வியூஸ் பெறாது. ஆனால் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை, இதை முறியடித்ததோடு, எத்தனை முறை பார்த்தலும் சலிக்காத வண்ணம் எடுத்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதையடுத்து, மகாராஜா படம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிக பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. இந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை Netflix வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் மகாராஜா படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மகாராஜா இந்த வருடமே நெட்ஃபிளிக்ஸில் 18.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News