ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பித்தலாட்டம் பண்ணிய ரோகிணியை கண்மூடித்தனமாக நம்பும் மாமியார்.. முதல் வாரிசை பெற்றெடுக்க போகும் மீனா

Meena is going to give birth to her first child: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா ரொம்பவே பணத்தாசை பிடித்த கேரக்டரில் குடும்பத்திற்குள்ளேயே ஓரவஞ்சம் காட்டி வருகிறார். அந்த வகையில் பணக்கார மருமகளாக இருக்கும் சுருதி மீது ஓவராக அன்பு காட்டி பணிவிடை செய்து வருகிறார். அதே மாதிரி ரோகிணியும் பணக்கார மருமகள் என்று நினைத்து அவரையும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்.

இவர்களுக்கு இடையில் பாவம் மீனா மாட்டிக் கொண்டு அங்கே வேலைக்காரி மாதிரி இருக்கிறார். காரணம் மீனா ஏழை வீட்டு மருமகள் என்பதால் அனைத்து வேலையும் இவர் மீது மாமியார் திணித்து விடுகிறார். அத்துடன் முத்துவும் நல்ல படிக்கவில்லை, வேலையும் பெரிதாக சொல்லும்படி இல்லை என்று மகன் மீது விஜயா மொத்த வன்மத்தையும் காட்டுகிறார்.

இதனை தொடர்ந்து விஜயாவின் மாமியார் கிராமத்திற்கு அனைவரையும் பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதற்காக கூப்பிடுகிறார். அங்கே போனதும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் படி பாட்டி ஒவ்வொரு அரங்கேற்றத்தையும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் பாட்டி மூன்று பேரண்களிடம் யாரு முதல் வாரிசை இந்த குடும்பத்திற்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு கிராமத்தில் இருக்கும் சொத்தை கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி செய்த உருப்படியான விஷயம்.. டிஆர்பி-யில் ஜொலிக்கும் சீரியல்

அந்த வகையில் விஜயா எப்படியாவது முதல் வாரிசு ரோகிணி அல்லது சுருதி மூலம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். எங்கே இந்த விஷயத்தில் மீனா முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி விடுவாரோ என்ற பயத்திலேயே இருக்கிறார். அத்துடன் பணக்கார மருமகள் மட்டும் நம்முடன் இருந்தால் போதும் என்று நினைத்து முத்துவையும் மீனாவையும் எப்படியாவது தனியாக அனுப்பி விட வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்.

ஆனால் இங்குதான் மிகப்பெரிய ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. அதாவது விஜயா நினைக்கிற மாதிரி ரோகினி பணக்கார வீட்டு பெண்ணும் கிடையாது. பார்லருக்கு சொந்தக்காரியும் இல்லை, அதே நேரத்தில் ஏற்கனவே ஒருவருடன் பழகி குழந்தையும் பெற்றுக் கொண்டு, அந்த குழந்தையை அம்மாவிடம் வளர்த்துக் கொண்டு வருகிறார். இப்படி பல பித்தலாட்டம் செய்து வரும் ரோகிணியை மாமியார் கண்மூடித்தனமாக நம்புகிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் ரோகினியின் உண்மையான முகத்திரை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டால் இவருடைய நிலைமை கேள்விக்குறிதான்.  இனி வரும் எபிசோடுகளில் ரோகினி பற்றிய விஷயங்கள் வெளிவந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். மேலும் பாட்டி சொன்ன மாதிரி அந்த குடும்பத்திற்கு முதல் வாரிசு முத்து மற்றும் மீனா மூலம் தான் வரப்போகிறது.

Also read: 2 நாள் கத்திட்டு மறந்திடுவாங்க.. டிஆர்பி வெறி பிடித்த விஜய் டிவி, மொத்த மானத்தையும் வாங்கிய பிக்பாஸ் 7

Trending News