வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பேரன், பேத்தி எடுக்கிற வயசுல விவாகரத்தா.. செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் மாமியார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனக்கு இத்தனை வருடம் துரோகம் செய்த கணவனை சற்றும் யோசிக்காமல் பாக்யா விவாகரத்து செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தாலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பாக்கியா உள்ளார். இந்நிலையில் பாக்கியா, கோபி விவாகரத்து செய்தி ஊர் முழுக்கப் பரவி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். இது அரசல் புரசலாக தற்போது ஜெனியின் அம்மா காதிலும் விழுந்து உள்ளது.

Also Read : என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீ தான் அப்பன்.. பாரதி தலையில் இடியை இறக்கிய வெண்பா

இதனால் நேராக பாக்கியாவின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அம்மா எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறார். அப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் செழியன் தலைகுனிந்து நிற்கிறார். அதன்பின்பு ஜெனி தனது அம்மாவை ரூமுக்கு அழைத்து செல்கிறார்.

செழியன் இந்த அவமானம் எனக்குத் தேவையா என பாக்கியாவை கண்டபடி திட்டி செல்கிறார். மேலும் ஜெனி தனது அம்மாவை சமாதானப்படுத்த முற்படுகிறார். எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீ வந்து கேட்கலாம். நான் இங்க சந்தோஷமா தான் இருக்கேன்.

Also Read : ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் கதிரு.. தானா திண்ணு வீணா போகும் பாண்டியன் குடும்பம்

ஆன்ட்டி விஷயத்துல தலையிடாத என ஜெனி தனது அம்மாவிடம் கூறுகிறார். ஆனால் நான் என் பொண்ண இந்த வீட்ல கொடுத்திருக்க. வெளியில கேள்வி கேட்டா நானும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இப்ப எதுக்கு விவாகரத்து.

அப்படி என்ன பாக்கியா, கோபி இடையே சண்டை என ஜெனியின் அம்மா விடாப்படியாக கேள்வி கேட்கிறார். ஆனால் ஜெனி எதுவும் சொல்ல முடியாமல் ஒரு வழியாக சமாளிக்க முயற்சி செய்கிறார். விவாகரத்துக்கே இப்படி என்றால் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டால் என்னென்ன நடக்கப்போகிறதோ.

Also Read : கதை கிடைக்காமல் ஒரே சம்பவத்தை உருட்டும் இயக்குனர்.. ஹேமாவுக்காக பாரதி எடுத்த முடிவு

Trending News