இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடல் பாடியுள்ள இளையராஜா பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் இசையமைத்து பாடல் பாடியுள்ளார். இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் தாண்டியும் பல பிரபலங்களும் இவரது இசைக்கு அடிமையாக தான் உள்ளனர்.
இளையராஜாவின் அம்மா பெயர் சின்னத்தாய் இதனால் தான் தளபதி படத்தில் வாலி “சின்னத்தாய் அவள் தந்த ராசாவே” எனும் பாடலை எழுதினார். அதாவது சின்னதாய் பெற்றெடுத்தது தான் இளையராஜா என்பதை குறிக்கும் வகையில் இப்பாடல் இடம் பெற்றது.
அதன் பிறகு அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இளையராஜா “ராஜா நான் ராஜாதி ராஜன் இந்த ராஜா” எனம் இளையராஜாவின் பெயரை வைத்தே பாடல் பாடப்பட்டது.
பின்பு நிழல்கள் படத்தில் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”எனும் பாடல் பாடினார். பாடல் வரிகளுக்கேற்ப இவரை பலரும் இசையின் ராஜ்ஜியம் எனக் கூறி வருகின்றனர். இது போன்று இளையராஜா அவர்களது படங்களில் பாடலாசிரியர்கள் பலரும் அவரது சொந்தவாழ்க்கையும், திறமையும் பற்றி எழுதி பாடியுள்ளனர்.