ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சண்டைக்காட்சியில் முடியை இழந்த மொட்ட ராஜேந்திரன்.. பின்பு அதே அடையாளமாக மாறிய சம்பவம்.!

தமிழ் சினிமாவின் காமெடி வில்லன் என கலக்கல் ரோல்களில் அசத்தி வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். இவரின் கரகர குரலும் கலகல பேச்சும் இவருக்கான அடையாளம் என்றால் அதை எல்லாம் கடந்து மொட்டை தலை தான் இவருக்கு முதல் அடையாளமாக தெரிகிறது. அதனால் தான் ராஜ் என்று கூறப்பட்டவர் மொட்டை ராஜேந்தாரன் என டைட்டில் கார்டில் கூட வலம் வருகிறார்.

1992 ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவின் பல்வேறு சிறு குறு ரோல்களில் வலம் வந்த ராஜ் அதிகமாரய் வந்தது ரவுடிக்கூட்டங்களில் ஒருவராகத்தான். முதலில் ஸ்டன்ட் பாயாக அறிமுகம் கண்டவர் எதனையும் யோசிக்காமல் அவற்றை சரியாக செய்து வந்தார்.

தலையில் கர்லிங் சிகையுடன் வந்தவருக்கு தமிழ் சினிமா தலையிலேயே கைவைத்தது. கேரளாவில் ஒரு சூட்டிங்கிற்கு சென்றவருக்கு அங்கே இருக்கின்ற நீரில் விழும் சீன் அப்போது ஆரம்பித்தது தலைமுடி பிரச்சினை ஒரு கட்டத்தில் எல்லாம் கொட்டி இல்லாமலே போனது. காரணம் அந்த நீர் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவு நீர் என சிரித்தபடியே சொல்கிறார்.

mottai-rajendran

அப்போது இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தப்பட்டேன். ஆனால் அதுதான் எனக்கு கடவுள் கொடுத்த சான்ஸ்னு அப்போ தெரியல இப்போ கண்டிப்பாக உணருகிறேன் என்றும் கூறிப்பிட்டார்.

பிதா மகன் நான் கடவுள் படங்கள் திரையில் தன்னை உயர்த்திக்காட்டியது நான்கடவுள் ராஜேந்திரனாக வலம் வர துவங்கினேன் காலப்போக்கில் அது மொட்டை ராஜேந்திரனாகவும் மாறிப்போனது என்றும் குறிப்பிட்டார்.

இப்போது தமிழில் 130 படங்கள் வரை நடித்துவிட்டேன் என்றும் தனக்கு கொடுக்கப்படும் ரோல் எப்படியாக இருந்தாலும் தட்டிக்கழிக்காமல் ஒப்புக்கொள்ள முயற்ச்சிக்கிறேன் என்றும் கூறினார்.

Trending News