சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வெளிநாட்டு அழகிகளுடன் ஜல்சா பண்ணும் மொட்டை ராஜேந்திரன்.. மண்ட பத்திரம் ப்ரோ என கலாய்த்த நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் மொட்டை ராஜேந்திரன். என்னதான் இவர் சினிமா உலகில் ஸ்டண்ட் கலைகளாக அறிமுகமாகி இருந்தாலும், பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்திற்கு பிறகு இவர் பெரிய வில்லன் நடிகராக அறிமுகம் எடுப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ அதற்கு  எதிர்மாறான விஷயம். ஏனென்றால், தற்போது மொட்டை ராஜேந்திரன் ஆஸ்தான காமெடியனாக உருவெடுத்துவிட்டார்.

மேலும் பேய் படங்கள், அடல்ட் காமெடி படங்கள் போன்ற படங்கள் அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். அதுமட்டுமில்லாமல், தற்போது கோலிவுட்டில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் யோகிபாபுவிற்கு டஃப் கம்பெடிட்டர் என்றால் அது மொட்டை ராஜேந்திரன் தானாம்.

இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் கிளாமரான உடை அணிந்த பல பெண்களின் நடுவே அமர்ந்து சரக்கடிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, பேசுபொருளாக மாறியுள்ளது.

அதாவது அட்டகத்தி தினேஷ் நடிப்பில், புன்னகைப்பூ கீதா இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘ நானும் சிங்கிள் தான்’. இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம்.

மேலும் அந்தப் படத்தில் உள்ள ஒரு காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள, பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News