ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நல்லதுக்கே காலம் இல்லை.. சினிமாவிற்காக எல்லாத்தையும் இழந்த மொட்டை ராஜேந்தர்

ஆரம்பத்தில் மொட்டை ராஜேந்திரன் படங்களில் பைட்டர் ஆக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு அவருடைய தோற்றம் மற்றும் குரல் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நான் கடவுள் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக நடித்தது போதும் என்று காமெடியில் கலக்க ஆரம்பித்தார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கோலமாவு கோகிலா என இவரின் காமெடி கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் தற்போது மொட்டை ராஜேந்திரன் பட வாய்ப்பு இல்லாமல் தவிர்த்து வருகிறாராம். அதாவது இவர் தனக்கு வரும் வாய்ப்பு எல்லாவற்றையுமே ஒத்துக்கொண்டு நடித்ததால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் உள்ளார். தனது திறமைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் சினிமாவில் இவர் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பார்.

ஆரம்பத்தில் மொட்டை ராஜேந்திரன் பீடி குடுத்துக்கொண்டு, சாப்பாடே டீ தான் என சினிமா வாய்ப்பு தேடி ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அதன்பிறகு வடபழனி ஸ்டன்ட் மாஸ்டர் அசோசியேஷன் தான் அவரது வீடு. இரவு, பகலாக அங்கேயே தங்கி இருந்தாராம்.

முதலில் மற்ற நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்துள்ளார். அந்தச் சமயத்தில் கண்டகண்ட தண்ணீரில் விழுந்து, கூவத்தில் புரண்டதால் தனது மொத்த முடியையும் மொட்டை ராஜேந்திரன் இழந்துள்ளார். இதனால் இவருக்கு அடைமொழியாக மொட்டை ராஜேந்தர் என்ற பெயரும் வந்தது.

இவ்வாறு சினிமாவுக்காக மொத்தத்தையும் இழந்த இவருக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்தவரின் நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர் பட வாய்ப்பு கொடுத்தால் ஒருவேளை அதை வைத்த மொட்டை ராஜேந்திரன் அடுத்தடுத்த இடத்திற்கு நகர வாய்ப்புள்ளது.

Trending News