ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மொட்டை ராஜேந்திரன் நடிக்காமல் இருக்க இதுதான் காரணம்.. எனக்கு எண்டே கிடையாது

மொட்டை ராஜேந்திரன் சினிமாவில் ஒரு அடியாளாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து வில்லன், குணச்சித்திரம், காமெடியன் என்று ஒவ்வொரு படியாக கடந்து இன்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். வித்தியாசமான வாய்ஸில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் இவர் விஜய் உள்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதிலும் குழந்தை ரசிகர்கள் இவருக்கு அதிகம். ஆனால் சமீப காலமாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இப்படி அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவர் சினிமாவில் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க தவறிவிட்டார்.

இதன் காரணமாக தான் அவருக்கு பட வாய்ப்புகள் சிறிது சிறிதாக குறைந்து தற்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் சினிமா துறையை பொறுத்தவரை இவர் மிகவும் எளிமையான மனிதர். படப்பிடிப்புக்கு வருவதற்கு வண்டி அனுப்புகிறேன் என்று கூறினால் கூட இவர் வேண்டாம் என்று மறுத்து விடுவாராம்.

தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்று விடுவாராம். அந்த அளவிற்கு இவர் மிகவும் எதார்த்தமான மனிதராக இருந்ததால் தயாரிப்பாளருக்கும் இவரால் அதிகமாக எந்த செலவும் இருக்காதாம்.

இதனால் அவர் சினிமா வட்டாரத்தில் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு மனிதராகவே இருந்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை என்றாலும் இனி வரும் காலத்தில் நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News