அபூர்வ சகோதரர்கள் மற்றும் பிஸ்தா போன்ற பல படங்களில் நடித்தவர் மௌலி. இவர் நடிப்பை தாண்டி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அன்றைய காலத்திலேயே உலகநாயகனே வைத்து படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் நள தமயந்தி என்ற படத்தின் மூலம் மாதவனை வைத்து இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறாமல் அறிமுக இயக்குனர் என்ற பெயரை மட்டும் வாங்கி கொடுத்தது.
அண்ணே அண்ணே: மௌலி இயக்கி நடித்த அண்ணே அண்ணே என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சுமித்ரா, விஜி மற்றும் விகே ராமசாமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
பம்மல் கே சம்பந்தம்: மௌலி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் பம்மல் கே சம்பந்தம். கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் இந்த படமும் உண்டு.
இப்படத்தில் சிம்ரன், சினேகா மற்றும் மணிவண்ணன் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருப்பார்கள். மௌனியின் திரை வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது ‘பம்மல் கே சம்பந்தம்’ தான். இப்படத்தில் கமல்ஹாசன் காமெடி கலந்த நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
பம்மல் கே சம்பந்தம் படம் பார்க்க
நள தமயந்தி: மாதவன் நடிப்பில் உருவான திரைப்படம் நள தமயந்தி. கீது மோகன்தாஸ் மற்றும் ஸ்ருதிகா ஸ்ரீமன் போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் சுமாரான வெற்றியை மட்டும்தான் பதிவு செய்தது. ஆனால் மாதவனின் திரைவாழ்க்கையில் முக்கிய படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நள தமயந்தி சிறப்பு காட்சிகள் பார்க்க
அதன் பிறகு மௌலி ஒரு வாரிசு உருவாகிறது, நன்றி மீண்டும் வருக, மற்றவை நேரில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவர் தமிழில் இயக்கிய 10 படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது கமல்ஹாசன் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’ மட்டுமே. அதன்பிறகு எந்த ஒரு படமும் பம்மல் கே சம்பந்தம் விட பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை.