தமிழ் சினிமாவின் காவியம் என அளிக்கப்படும் திரைப்படம் தான் மௌன ராகம். இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன. இன்றும் இப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
ரேவதியின் வாழ்க்கையிலேயே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது மௌன ராகம் திரைப்படம் தான். இப்படத்தில் ரேவதியின் தங்கையாக சோனியா நடித்துள்ளார். சோனியா பிரபல நடிகரான போஸ் வெங்கட்டின் மனைவியாவார்.

அதன் பிறகு சோனியா பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் கூட செங்கமலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் அனைவருக்கும் தெரியக்கூடிய நாயகியாக பரிச்சயமானவர்.

அதுமட்டுமில்லாமல் உத்தமபுத்திரன் படத்தில் விவேக்கிற்கு மனைவியாகவும் கொடி மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் போஸ் இருக்கு மனைவியாக சோனியா நடித்திருப்பார். ஆனால் உண்மையிலேயே இவர்கள் இருவரும் கணவன் மனைவி தான் என்பது பலருக்கும் தெரியாது.
2002ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சின்னத்திரை சீரியல் வாழ்க்கை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் முல்லைக்கொடி கதாபாத்திரத்திலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் புஷ்பா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.