புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மௌனம் பேசியதே படத்தை மிஸ் செய்த விஜய்.. அமீர் சொன்ன காரணத்தை பாருங்க!

தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக இருப்பது மௌனம் பேசியதே. அமீர் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மாயாஜாலத்தை தனியே சொல்ல வேண்டுமா என்ன. படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்தது தான் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

அமீர் இன்று நடிகராக பலராலும் அறியப்பட்டாலும் ஒரு இயக்குனராக நிறைய ரசிகர்கள் அவரை மிஸ் செய்கின்றனர் என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். அதற்கு காரணம் அவர் எடுத்த படங்கள் அப்படி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியம் எனும் சொல்லும் அளவுக்கு தன்னுடைய இயக்கத்தில் முத்திரை பதித்திருந்தார் அமீர்.

அதுவும் பருத்திவீரன் படம் எல்லாம் சரித்திரத்தில் இடம்பெற்ற வெற்றிப்படமாக கருதப்பட்டது. சரி இப்போது மௌனம் பேசியதே பஞ்சாயத்துக்கு வருவோம். முதலில் அமீர் மௌனம் பேசியதே படத்தை சூர்யா மற்றும் விக்ரமை வைத்து எடுக்க ஆசைப்பட்டார். அதாவது சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் விக்ரமும், நந்தா நடித்த கதாபாத்திரத்தில் சூர்யாவையும் நடிக்கவைக்க ஆசைப்பட்டு ஒரு டிசைன் செய்தாராம்.

அதன் பிறகு இந்த படத்தை விஜய்யை வைத்து செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து விஜய் நடித்த இந்த படம் வேற லெவல் வெற்றி பெறும் என்பதை கணித்து அதற்கு சில முயற்சிகளை எடுத்து பலனளிக்காமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார். அன்றைய காலகட்டங்களில் மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருந்ததாகவும் அதேபோல் விஜய் அவ்வளவு சீக்கிரம் புதிய இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் எனவும் கூறியதால் விஜய்யிடம் வந்த கதையை சொல்லவே தயங்கி மிஸ் செய்து விட்டாராம் அமீர்.

இதை எப்படி அமீர் நம்பினார் என்பதுதான் தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அதிகம் புதுமுக இயக்குனர்கள் உடன் பணியாற்றிய நடிகர் என்றால் அது விஜய் தான் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்படி இருக்கையில் அமீர் எப்படி அப்படி ஒரு விஷயத்தை நம்பி இதை மிஸ் செய்தார் என்பது தெரியவில்லை.

ஆனால் நாம் உண்ணும் அரிசியில் நம் பெயர் எழுதி இருக்க வேண்டும் என்பது போல அந்த படம் சூர்யாவுக்கு தான் என்று எழுதி இருக்கும்போது யாரால் மாற்ற முடியும். சும்மா சொல்லக்கூடாது சூர்யாவும் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். ஒருவேளை மௌனம் பேசியதே படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தால் அந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.

Trending News