வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

இளையராஜாவின் டார்ச்சர் தாங்க முடியல.. இசையமைப்பாளரான 2 இயக்குனர்கள், செம ஹிட்டான பாடல்கள்

Music Director Ilayaraja: எண்பதுகளின் காலகட்டத்தில் இருந்து இசை உலகின் முடி சூடா மன்னனாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன் தான் என்பது போல், இளையராஜாவின் இசை என்றாலே அந்த படம் ஹிட் தான் என்ற நிலைமை தான் அப்போது இருந்தது. கதை, திரைக்கதை மொக்கையாக இருந்தாலும் இவர் கொடுக்கும் ஐந்து பாடல்களால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும்.

அந்த காலகட்டத்தில் இளையராஜா மட்டுமே வெற்றி பெற்ற இசையமைப்பாளராக இருந்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாடல்களுக்காக இவருடைய ஸ்டூடியோவில் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர். இதனாலேயே இளையராஜா வைத்தது தான் சட்டம் என்பது போல் தான் தமிழ் சினிமா அப்போது இருந்திருக்கிறது.

Also Read:மொக்கை வாங்கி, டெபாசிட் இழந்த ஆறு பார்ட் 2 படங்கள்.. பார்க்கவே முடியாமல் தலைவலி ஏற்படுத்திய கமல்

இந்த இயக்குனருடன் வேலை செய்ய மாட்டேன், இந்த தயாரிப்பாளர் எனக்கு வேண்டாம், இந்த பாடலாசிரியர் என் இசைக்கு பாட்டு எழுத கூடாது என எக்கச்சக்க நிபந்தனைகளை போட்டு இயக்குனர்களை விழிப்புதுங்க வைத்திருக்கிறார் இளையராஜா. இதில் செம்ம காண்டான இயக்குனர்கள் இரண்டு பேர் இசையமைப்பாளர்களாகவே மாறி விட்டார்கள்.

இதில் முதலில் சொல்ல வேண்டும் என்றால் இயக்குனர் பாக்யராஜ் தான் இசையமைப்பாளராக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது நம்ம ஆளு, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100 மற்றும் ஆராரோ ஆரிரரோ போன்ற படங்களுக்கு பாக்யராஜ் இசை அமைத்தார். இந்த படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read:யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

இதில் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு காட்சியில் ஷோபனா மற்றும் பாக்யராஜ் இருவருக்கும் இடையே பாட்டு போட்டி ஒன்று நடக்கும். அந்தப் பாடலில் சங்கீதம் பாட கேள்வி ஞானமே போதும் என வரிகளை வைத்திருப்பார்கள். இறுதியில் கர்நாடக இசை படித்த ஷோபனா அந்தக் கருத்தை ஒத்துக் கொள்வது போலவும் பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். இது இளையராஜாவின் டார்ச்சருக்கு பாக்யராஜ் பதில் சொன்னது போலவே இருக்கும்.

பாண்டியராஜன் முதன் முதலில் இயக்கிய ஹீரோவாக நடித்த படம் ஆண்பாவம். இதில் இளையராஜா இசையமைத்த காதல் கசக்குதய்யா பாடல் இன்றுவரை பிரபலம். ஒரு கட்டத்தில் பாண்டியராஜுக்கு, இளையராஜா கசந்து விட்டார். இதனால் 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நெத்தியடி படத்தின் பாடல்களுக்கு அவரே இசையமைத்து விட்டார்.

Also Read:லியோவை விட அதிக விலைக்கு போன விஜய் 68.. அநேகத்துக்கு வெங்கட் பிரபுவிடம் அசிங்க பட போகும் லோகேஷ்

Trending News