செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்தா.. சிக்கலில் மாட்டி தவித்த சந்தானத்தின் படம்

Santhanam: சந்தானம் காமெடியனாக இருந்த வரைக்கும் அவரது காட்டில் அடை மழை தான் பெய்து வந்தது. டாப் நடிகர்கள் அனைவரின் படத்திலும் சந்தானம் காமெடி ரோலில் நடித்து வந்தார். அதுவும் சில படங்களில் ஹீரோவையே டம்மி பீஸ் ஆக்கிவிட்டு சந்தானம் தான் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்திருப்பார்.

ஆனால் அவருக்கு எப்போது ஹீரோ ஆசை வந்ததோ அப்போதே சந்தானத்தின் சினிமா கேரியர் அழிவை நோக்கி சென்றது. ஆனாலும் மனம் தளராத சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல வருடங்களாக அவரது படம் ஒன்று ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது.

Also Read : சமீபத்தில் சந்தானம் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிரிப்பே வரவழைக்காத காமெடி மூவிஸ்

அதாவது நடிப்பு நாயகன் நாகேஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சர்வர் சுந்தரம் படத்தின் டைட்டிலைக் கொண்டு சந்தானம் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாமே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. இந்நிலையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

அப்போது விநியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து சர்வர் சுந்தரம் படத்தை வாங்கி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு படத்தை வெளியிடாமல் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். வேறு யாரிடமாவது இந்த படத்தை கொடுத்திருந்தால் இந்நேரம் படம் வெளியாகி பழைய படம் போல் ஆகி இருக்கும்.

Also Read : கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்தா என்ற கதையாக, எங்கிருந்தோ வந்து விநியோகஸ்தர் படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் தயாரிப்பாளர் தற்போது வரை மிகுந்த சிரமம் பட்டு வருகிறார்.

இதனால் தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்த ரமேஷ் பிள்ளை இப்போது விநியோகஸ்தர் மீது வழக்கு போட்டு உள்ளாராம். மேலும் இந்த வழக்கு கண்டிப்பாக சாதகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் சர்வர் சுந்தரம் திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறாராம் சந்தானம்.

Also Read : யாருக்கும் அடிபணியாத சந்தானம்.. அஜித் பெயரை கேட்டு 8 வருடத்திற்கு பின் சரண்டர்

Trending News