வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட 5 பிரபலங்கள்.. 44 வருட சினிமா வாழ்க்கையில் வீட்டை விற்ற சம்பவம்!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் ஆரம்ப காலத்தில் தனது துறையில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தனர். அதாவது நடிகர் நடிப்பது மட்டும் இயக்குனர் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைவரும் எப்படியாவது தயாரிப்பாளராகி கோடிக்கணக்கில் சம்பாதித்து விடும் என நினைத்து தயாரிப்பாளராகும் களத்தில் இறங்கினர்.

அப்படி ஒரு காலத்தில் வெற்றியின் மூலம் உச்சத்தில் இருந்த பல பிரபலங்களும் தயாரிப்பில் இறங்கி ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்து அதன் மூலம் நஷ்டம் அடைந்தது சுதாரித்துக்கொண்டு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியேறினர். அப்படி எந்தெந்த பிரபலங்கள் தயாரிப்பு துறையில் கால் பதித்து ஆள விடுங்கடா என ஓடிய பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

பெப்சி விஜயன்: பெப்சி விஜயன் பல படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான இனிமேல் இப்படித்தான் படத்தில் அவருக்கு மாமனாரும் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக ஒரு லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடிய காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் அவரது மகன் சபரிஷ் விஜயன் வைத்து மார்க்கண்டேயன் என்ற படத்தை இயக்கினார். மேலும் இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படத்தின் தோல்விக்குப் பிறகு அவர் எந்த படத்தையும் தயாரிக்க வில்லை.

ஜாகுவார் தங்கம்: ஜாகுவார் தங்கம் தனது மகனான விஜய சிரஞ்சீவி வைத்து சூர்யா படத்தை இயக்கி தயாரித்து இருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை அதன்பிறகு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

கே பாக்யராஜ்: பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ரசிகர் வரவேற்பை பெற்றதையடுத்து அதன் பிறகு தயாரிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஒரு காலத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் பாக்யராஜ் வைத்து படத்தை தயாரித்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் பாக்யராஜ் வைத்து இயக்கிய படத்தை பாதியிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். பின்பு அப்படத்தையும் தானே தயாரித்து படத்தை வெளியிட்டு பல கோடி சொத்துக்களை இழந்துள்ளார். பாக்கியராஜ் டிநகரில் புது பங்களாவில் விற்று தான் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

bakkiyaraj-cinemapettai
bakkiyaraj-cinemapettai

நாசர்: நாசர் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார். மோகன்லால் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான பாப்கார்ன் படத்தை நாசர் தயாரித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதன்பிறகு பறந்து செல்லவா எனும் படத்தில் தனது மகனை ஹீரோவாக எடுத்தும் தோல்வியடைந்தார்.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களும் தொடர்ந்து விஜய்சேதுபதி படங்கள் இயக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தை இவரே தயாரித்து இருந்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதன்பிறகு தயாரிப்பில் இருந்து விலகி உள்ளார்.

Trending News