வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தோல்வி பயத்தில் வெளிவந்து தப்பித்த 6 படங்கள்.. இதுக்கு பேர்தான் மயிரிழையில் எஸ்கேப் ஆகுறது

தமிழ்சினிமாவில் சில படங்கள் வெளியானபோது ரசிகர்களின் கவனத்தைப் பெறாமல் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகு அப்படத்தின் கதையின் மகத்துவத்தை புரிந்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவ்வாறு திரைப்படம் வெளியானபோது ப்ளாப் ஆகி அதற்குப் பிறகு மக்கள் கொண்டாடிய படங்களை பார்க்கலாம்.

சேது : பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா நடிப்பில் வெளியான திரைப்படம் சேது. விக்ரமுக்கு சியான் விக்ரம் என்று பெயர் கொடுத்த படம் இதுதான். விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த சேது படம் வெளியானபோது வரவேற்பு கிடைக்கவில்லை. சிறிது காலம் கழித்து இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அன்பே சிவம் : சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். அப்போது அன்பே சிவம் படம் வெளியாகி இப்படத்தின் கதை யாருக்கும் புரியவில்லை என்ற பல விமர்சனத்திற்கு உள்ளானது. வசூல் ரீதியாக இப்படம் தோல்வி அடைந்தாலும் அதன்பிறகு, ரசிகர்களுக்கு இப்படம் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற முன் பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அதான் கடவுள் என்ற வசனம் இன்றும் ட்ரெண்ட் ஆக உள்ளது.

பயணம் : விமானத்தில் 2 மணி நேர பயணத்தை படமாக எடுக்கப்பட்டது பயணம். திரில்லர் படமாக எடுக்கப்பட்டு இருந்த பயணம் படத்தை ராஜா மோகன் இயக்கியிருந்தார். நாகர்ஜுன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு திகிலான இந்த பயணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆரண்ய காண்டம் : இப்படத்தில் 6 பேர் ஒருவரை ஒருவர் கொல்ல திட்டமிடும் ஒருநாள் கதை ஆரணிய காண்டம். தியாகராஜா குமாரராஜா இயக்கி ஆரண்யகாண்டம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆரண்யகாண்டம் வெளியீட்டின்போது வெற்றி பெறாமல் பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம்.

தெகிடி : அசோக் செல்வன், ஜனனி ஐயர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி. இப்படத்தில் துப்பறியும் வேலை பார்க்கும் அசோக் செல்வன், தன்னுடைய காதலி ஜனனி ஐயர் கொல்லப்பட போகிறார் என்பதை அறிந்து எப்படி அவரைக் காப்பாற்றுகிறார் என்பதே தெகிடி. வித்தியாசமான கதையாக எடுக்கப்பட்ட இப்படம் வெளியான போது வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தெகிடி படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பண்ணையாரும் பத்மினியும் : அருண் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். வயதில் மூத்த ஜோடிகளின் காதலும், ஒரு பழைய காரின் மீது ஈர்க்கப்பட்ட மனிதர்களும் என அருமையான கதை களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த காரின் டிரைவர் ஆக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி சில நாட்களுக்குப் பிறகே பண்ணையாரும் பத்மினியும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Trending News