திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

50 நாட்களை கடந்த சிம்புவின் மாநாடு.. வேற லெவலில் கொண்டாடிய படக்குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புவுக்கு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் போன்றவர்களுக்கும் திரை வாழ்வில் முக்கிய படமாக அமைந்துள்ளது.

வித்தியாசமான கதையை தனக்கே உரிய பாணியில் கொடுத்திருக்கும் வெங்கட் பிரபு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இது தவிர படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எஸ் கே சூர்யாவின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப் படம் வெளியான முதல் வாரத்திலேயே பல கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. மேலும் மாநாடு திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கேரள ரசிகர்களையும் பெருமளவு கவர்ந்துள்ளது. இதன் காரணமாக இப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் மிரட்டியுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் உட்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் சக்சஸ் மீட் வைத்து அதனை கொண்டாடினர். மேலும் இத்திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது மாநாடு திரைப்படம் 50 நாட்களை கடந்து தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் பெரிய அளவில் கொண்டாடியுள்ளனர். அதாவது மாநாடு படத்திற்காக பெரிய பேனர் வைத்து அதில் படத்தில் வேலை செய்த அனைத்து டெக்னீசியன்கள் போட்டோவையும் போட்டு பாராட்டியுள்ளனர்.

மேலும் கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற ஒரு திரைப்படமாக மாநாடு திரைப்படம் இருக்கிறது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News