சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. தியேட்டரில் காத்து வாங்கிய சாகுந்தலத்தை வெளியிடும் அமேசான்

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளில் கூட்ட நெரிசலில் படம் பார்ப்பதை ரசிகர்கள் இப்போது பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்கள். காரணம் வீட்டிலேயே சோபாவில் படுத்துக்கொண்டு, கையில் கொஞ்சம் ஸ்னாக்ஸ் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது சொகுசு தான்.

இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஓடிடி நிறுவனங்கள் வாரத்துக்கு வாரம், புது படங்களை வெளியிட்டு கல்லாவை கட்டி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை தற்போது பார்க்கலாம். கடந்த மாதம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் நிறைய படங்கள் வெளியாகி இருந்தது.

Also Read : சமந்தா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

குறிப்பாக சொப்பன சுந்தரி படம் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தது. இந்நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வருகின்ற மே 12 ஆம் தேதி சொப்பன சுந்தரி படம் வெளியாகிறது. இந்த படத்தை பார்க்க ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து சமந்தாவின் நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகி இருந்தது. இப்படம் தியேட்டரில் காத்து வாங்கிய நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அழாத குறையாக தனது மணக்குமரலை கொட்டி தீர்த்தார். ஆனால் சாகுந்தலம் படம் வெளியாவதற்கு முன்பே 35 கோடி கொடுத்து அமேசான் வாங்கி இருந்தது.

Also Read : சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

சாகுந்தலம் படமும் மே 12 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமந்தாவுகாக மட்டுமே சாகுந்தலம் படத்தை ரசிகர்கள் ஒரு தடவையாவது ஓடிடியில் பார்ப்பார்கள் என்று நம்பலாம். இந்த படங்களைத் தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரும் வெளியாகிறது.

அதாவது சோனாக்ஷி சின்ஹாவின் தஹாத் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. மேலும் நசிருதீன் ஷா நடிப்பில் வெளியான தாஜ் ரெஜின் ஆப் ரிவெஞ் என்ற வலைத்தொடர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் ஜீ 5 தளத்தில் மே 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Also Read : சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

Trending News