வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

அருண்பாண்டியனை ஹீரோவாக தானே தெரியும்.. வில்லனாக மிரட்டிய 6 படங்கள்

தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகராக இருந்தவர் தான் அருண் பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் நடித்த இணைந்த கைகள் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அருண்பாண்டியன் வில்லனாக நடித்த திரைப்படங்களை பார்க்கலாம்.

ரோஜா மலரே: ஜெயமுருகன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரோஜா மலரே. இப்படத்தில் முரளி, ரிவா, அருண்பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அருண்பாண்டியன், அருண் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்திருந்தார்.

வீரநடை: சீமான் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ, வாகை சந்திரசேகர், பொன்வண்ணன், விஜயசாரதி, நீராஜா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர் கே.சேது ராஜேஷ்வரன் மற்றும் எம் .கே. ஹரிஷங்கர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் அருண்பாண்டியன் கோட்டைச்சாமி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

திருப்பதி: தல அஜித்தின் நடிப்பில் பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருப்பதி. இப்படத்தில் கதாநாயகியாக சதா நடித்து இருந்தார். திருப்பதி படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜ். படத்தில் அருண்பாண்டியன் ஏ சி முரளியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.

ரிஷி: சுந்தர் சி இயக்கத்தில் சரத்குமார், மீனா, பிரகாஷ்ராஜ், தேவன், எஸ். வி. சேகர், ரமேஷ் கண்ணா, சங்கவி, அருண்பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். 2001 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் வெற்றி படமாகவே அமைந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் மீனா பஞ்சு அருணாச்சலம். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

arun-pandiyan
arun-pandiyan

கோவை பிரதர்ஸ்: சத்யராஜ், சிபிராஜ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் கோவை பிரதர்ஸ். இத்திரைப்படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம். இப்படத்தில் அருண்பாண்டியன் மருத்துவராக நடித்திருந்தார். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

இன்பா: 2008ல் வேந்தன் இயக்கத்தில் வெளியான அதிரடித் திரைப்படம் இன்பா. ஷ்யாம், சினேகா, அருண்பாண்டியன், அரவிந்த் ஆகாஷ், கஞ்சா கருப்பு, பூர்ணிதா, ஆதித்யா, சுலோச்சனா, ரேகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை பாலாஜி. இப்படத்தில் அருண்பாண்டியன், சினேகாவின் அண்ணன் மலை கணேஷ் வேடத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -spot_img

Trending News