ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சினிமாவில் வெற்றி கண்ட 7 நட்சத்திர ஜோடிகள்.. இதுல ரெண்டு ஜோடி பிரிஞ்சுட்டாங்க

சினிமாவில் நடித்த பின் நிஜ வாழ்க்கையில் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட ஜோடிகளின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.  இவர்கள் நடித்த படங்களின் மொத்த லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து உங்களுக்குப் பிடித்த படம் எது என்பதை கமெண்டில் பதிவுசெய்யவும்.

பார்த்திபன், சீதா: தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சீதா. இவர் நடித்த முதல் திரைப்படம் ஆண் பாவம். இப்படத்திற்குப் பிறகு பார்த்திபன் நடித்து இயக்கிய படம் புதிய பாதை. இப்படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

கமலஹாசன், கௌதமி: தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களை தந்தவர் கௌதமி. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படத்தில் கமலஹாசன் சுயம்புலிங்கம் ஆகவும் அவரது மனைவியாக கௌதமி ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு மக்களிடையே பாராட்டு கிடைத்தது.

kamal-gauthami
kamal-gauthami

சரத்குமார், ராதிகா: கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலி ஆக நடித்த ராதிகா ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்து பல வெற்றிகளை கண்டுள்ளார். இவர் கணவர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஏழு படங்களில் நடித்துள்ளார். நம்ம அண்ணாச்சி, ரகசிய போலீஸ், சூரியவம்சம், தென்காசிப்பட்டனம், சென்னையில் ஒரு நாள், சண்டமாருதம், கடைசியாக வானம் கொட்டட்டும் படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.

அஜித், ஷாலினி: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் தான் சாலினி. சரண் இயக்கத்தில் அஜித் ஷாலினி நடித்து வெளியான திரைப்படம் அமர்க்களம். இப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக அவருடைய கடமையை ஆற்றி வருகிறார்.

சூர்யா, ஜோதிகா: தமிழ் சினிமாவில் சூப்பர் சூப்பர்ஹிட் ஜோடியாக வலம் வருபவர் தான் சூர்யா, ஜோதிகா. இருவரும் முதலில் சேர்ந்து நடித்த படம் “பூவெல்லாம் கேட்டுப்பார்”. பிறகு கேஆர் ஜெயா இயக்கத்தில் “உயிரிலே கலந்தது” படத்தில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள். சூர்யா, ஜோதிகாவிற்கு சூப்பர் ஹிட் மூவி ஆக அமைந்தது “காக்க காக்க”. அதன்பிறகு 2004 இருவேறுபட்ட கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் “பேரழகன்”. அதன்பின்பு நகைச்சுவை காதல் திரைப்படமாக 2005ல் வெளிவந்த மாயாவி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் “சில்லுனு ஒரு காதல்”. ஜோதிகா, இப்படத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இவன்தான். மகள், மகன் வளர்ந்தவுடன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

suriya-jyothika
suriya-jyothika

பிரசன்னா, சினேகா: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் புன்னகை இளவரசி என்று அழைக்கப்படுபவர் சினேகா. இவர் நடித்த ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில் என இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 2009இல் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு 2011-இல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்காமல் நடிப்பதை குறைத்து கொண்டு, குடும்பத்தை கவனித்து வந்தார். 2017இல் தனுஷுடன் சேர்ந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்யா, சாயிஷா: வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் சாயிஷா. விஜய்சேதுபதி, கார்த்தி என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இவருடைய நடனத்தால் லேடி பிரபுதேவா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். நடிகர் ஆர்யா, சாயிஷா இருவரும் சேர்ந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் இவருக்கு காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அதன்பிறகு “காப்பான்” , “டெடி” படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Trending News