வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கிராண்ட் பினாலே.. வெற்றியாளர் இவர்களா!

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியானது ஒளிபரப்பு செய்யப்படும். இதில் இதுவரை இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தது தற்போது மூன்றாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள், அவர்களது நிஜ ஜோடியுடன் எந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி உடன் வாழ்கின்றனர் என்பதை பல்வேறு டாஸ்க்கள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இன்று மதியம் 3 மணியளவில் ஒளிபரப்பாக உள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ஜாக்-ரோஷினி, யுவராஜ்-காயத்ரி, வினோத்-ஐஸ்வர்யா, சரத்-கிருத்திகா, யோகி-மைனா, ராஜ்மோகன்-கவிதா ஆகியோர் இறுதி சுற்றில் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன்3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் சரத்-கிருத்திகா என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களது நடனமாடும் திறமையை காட்டி நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இன்னிலையில் கடும் போட்டியில் சரத் மற்றும் கிருத்திகா இருவருமே டைட்டில் வின்னர் ஆனது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் பரத்-கிருத்திகா இருவருக்கும் இடையே உள்ள புரிதல் பலரையும் வியப்படைய செய்தது. எனவே தற்போது இவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன்3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து இந்த தம்பதிகளுக்கு சோசியல் மீடியாக்களில் எக்கச்சக்கமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Trending News