வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

களைகட்டும் விஜய் டிவியின் Mr &Mrs சின்னத்திரை.. கலந்து கொள்ளப் போகும் 10 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ

Mr& Mrs Chinnathirai 5: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கலில் ஒரு சில மக்களிடையே அதிக செல்வாக்கை பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. செலிபிரிட்டிகள் அவர்களுடைய சொந்த பார்ட்னர் உடன் இந்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இதுவரை நடந்த 4 சீசன்கள் எல்லாமே மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திரஜா – கார்த்திக்: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கார்த்திக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவர் பிகில் மற்றும் பிரமன் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய கணவர் கார்த்திக் உதவி இயக்குனராக இருக்கிறார்.

Indraja Karthick
Indraja Karthick

மீரா கிருஷ்ணா – சிவகுமார்: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை கேரக்டரில் நடித்த மீரா கிருஷ்ணா அவருடைய கணவர் சிவக்குமார் உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

meera krishna sivakumar
meera krishna sivakumar

நவீன் – சௌமியா: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பி கார்த்திக் கேரக்டரில் நடித்தவர் நவீன். இவர் தன்னுடைய மனைவி சௌமியா உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Naveen sowmiya
Naveen sowmiya

நாஞ்சில் விஜயன் – மரியா: விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவி ம மரியாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Nanjil vijayan Mariya
Nanjil vijayan Mariya

ஆஷிக்- சோனு: பிரபல யூடியூப் சேனலில் ஹேண்ட் பேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆஷிக். இவர் தன்னுடைய மனைவி சோனு உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Ashiq sonu
Ashiq sonu

சமீர்- அஜீபா: சமீபத்தில் விஜய் டிவியில் முடிந்த சீரியல் மோதலும் காதலும். இந்த சீரியலின் ஹீரோ சமீர் அவருடைய மனைவி அஜீபாவுடன் கலந்து கொள்கிறார்.

Sameer Ajeeba
Sameer Ajeeba

வைஷாலி – தேவ்: ராஜா ராணி சீரியலின் முதல் சீசனை கார்த்திக்கின் தங்கை கேரக்டரில் நடித்தவர் தான் வைஷாலி. இவர் பாண்டியன் ஸ்டோர் முதல் சீசனில் ஐஸ்வர்யா கேரக்டரில் சில நாட்கள் நடித்தார். இவர் தன்னுடைய கணவர் தேவ் உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Vaishali dev
Vaishali dev

அமித் – ரஞ்சனி: கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் அமித். இவர் மிருதன் மற்றும் அரண்மனை போன்ற பல படங்களின் நடித்திருக்கிறார். இவருடைய மனைவி ரஞ்சனி ஒரு தொகுப்பாளினி. இந்த நட்சத்திர தம்பதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

Amit-Ranjani
Amit-Ranjani

லின்சி – சுரேந்தர்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிச்சி தன்னுடைய கணவர் சுரேந்தருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொள்கிறார்.

Lincy - Surendar
Lincy – Surendar

தாமரை: பார்த்தசாரதி: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரீட்சையமானவர் தாமரை. இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா போன்ற சில சீரியல்களிலும் நடித்தார். இவர் கணவர் பார்த்தசாரதியுடன் இந்த நிகழ்ச்சியை கலந்து கொள்கிறார்.

Thaamarai Paarthasarathy
Thaamarai Paarthasarathy

கொட்டாச்சி – அஞ்சலி: மறைந்த காமெடி நடிகர் விவேக்கின் குழுவில் இருந்தவர் தான் கொட்டாச்சி. இவருடைய மகள் தான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்தது. கொட்டாச்சி தன்னுடைய மனைவி அஞ்சலியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

kottachi anjali
kottachi anjali

Trending News