திரையுலகில் எத்தனையோ சம்பவங்கள் மறைமுகமாக நடந்திருந்தாலும் அதற்கு சரியான தீர்வு காணாமல் கண்ணும் காதுமாய் வைத்து மறைக்கப்பட்டு விடுவார்கள். அப்படித்தான் நடிகரும் அரசியல்வாதிமான எம்ஜிஆரின் துப்பாக்கி சூடு சம்பவம் என்ன ஆனது என்று இதுவரை யாரும் அறியாத சம்பவமாக 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்டு வருகிறது.
அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர் ராதா நெருங்கிய நண்பர்களாக இருந்த பொழுது ஏன் திடீரென்று எம்ஆர் ராதா துப்பாக்கியால் தாக்கினார் என்று இன்றுவரை பலருக்கும் பெரிய குழப்பமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவரையும் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேருமே தப்பித்து விட்டார்கள்.
Also read: தமிழ் சினிமாவில் அதிக வெள்ளி விழா கொடுத்த 3 நடிகர்கள்.. எம்ஜிஆரை பின்னுக்கு தள்ளிய மும்மூர்த்திகள்
பிறகு போலீசார் விசாரணையில் அவர்களுக்குள் இருந்த பல பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடந்தபட்டதாக வழக்கு ஆரம்பித்து அவருக்கு ஐந்தாண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இவரிடம் கேட்டபோது அதற்கு நக்கலாக பதில் அளித்திருக்கிறார்.
எம் ஆர் ராதாவிடம் ஏன் நீங்கள் எம்ஜிஆரை சுட்டீர்கள் என்று கேட்டதற்கு ஏன் நான் சுட கூடாதா நானும் எம்ஜிஆரும் நண்பர்கள். புருஷன் பொண்டாட்டி சண்டை போடறது இல்லையா, அண்ணன் தம்பிக்குள் சண்டை வருது இல்லையா அதே மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டோம்.
Also read: எம்ஜிஆரை சுட்ட பின்பும் குறையாத மவுசு.. திரையுலகை ஆட்சி செய்த எம் ஆர் ராதாவின் கடைசி படம்
என்ன கத்தி இருந்தா கத்தி சண்டை, கம்பு இருந்தா கம்பு சண்டை, எங்களுக்கு அந்த ரெண்டும் இல்லாததால் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது. அதனால் துப்பாக்கி சண்டை போட்டுக்கிட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டேன். இது ஒரு பெரிய விஷயமா பேசிக்கிட்டு குத்தம் கண்டுபிடிக்கிறீங்க போவீங்களா என்று நக்கலாக பேசிட்டு ஜெயிலுக்கு போயிருக்கிறார்.
பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து பெரியார் இறப்பிற்கு பரோலில் வந்த எம் ஆர் ராதா, எம்ஜிஆரை பார்த்து என்ன ராமச்சந்திரா எப்படி இருக்கிறாய் என்று கேட்டு என்ன அரசியலில் போய் சேரப் போகிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் ஆமா அண்ணன் என்று கூறியிருக்கிறார். உடனே அங்கு இருந்தவர்கள் மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்திடக் கூடாது என்று இவரை கைதாங்களா கூப்பிட்டு வரும்போது நக்கலாக எம் ஆர் ராதா இன்னும் இரண்டு குண்டு சேர்த்தே சுட்டிருக்கலாமோ என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
Also read: ஒரே ரூமில் ட்ரீட்மென்ட் பார்த்த எம்ஜிஆர், MR ராதா.. துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விளக்கிய ராதாரவி