வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிச்ச 10 படத்துல ஒன்னு கூட ஓடல, அதுக்குள்ள ஓவர் ஆட்டிட்யூட்.. எம்எஸ் பாஸ்கர் சர்டிபிகேட் கொடுத்த இளம் ஹீரோ

Young Hero: ‘ஓவரா ஆடுனா உடம்புக்கு ஆகாது’ என்றுதான் அந்த இளம் ஹீரோவை பார்த்து சொல்ல தோன்றுகிறது. இவர் சினிமாவில் பத்து படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட உருப்படியா ஓடுன பாடில்லை. அப்படி இருந்தும் கொஞ்சம் ஓவராகவே ஆட்டிட்யூட் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட அந்த ஹீரோவுக்கு தான் சமீபத்தில் எம்எஸ் பாஸ்கரும் நல்ல பையன், நல்லா வருவார் என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் வெற்றி. எட்டு தொட்டாக்கள் படத்திற்கு பிறகு ஜீவி, C/o காதல், வனம், ஜோதி, ஜீவி 2, பம்பர் என மொத்தமாக இவர் ஹீரோவாக நடித்த 9 படங்கள் இதுவரை ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ரெண்டு படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகல. ஆனா வெளியான ஒரு படம் கூட ஹிட்டடிக்கவில்லை. அதற்குள் இவருக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்து தான் சாப்பாடு வரணும் என்று படப்பிடிப்பு தளத்தில் ஓவர் அலப்பறை காட்டுகிறார். சில சமயம் அவர் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஹோட்டலில் இருந்து தான் உணவு வர வேண்டும் என்றும் ஓவராக அடம் பிடிக்கிறாராம்.

Also Read: எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஊறிப் போய் நடிக்கும் 5 பிரபலங்கள்.. கமலையே பிரமிக்க வைத்த திரிபுரசுந்தரி

ஓவரா ஆடும் இளம் ஹீரோ

வெற்றி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆலன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தான் இந்த அக்கப்போரெல்லாம் நடந்திருக்கிறது. ஆலன் படத்தில் வெற்றியுடன் கருணாகரன், பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ஜெர்மனியை சேர்ந்த தபேயா மதுரா என்பவர் நடிக்கிறார். ஆனால் ஆலன் படப்பிடிப்பில் வெற்றி கொஞ்சம் ஓவராகவே தான் நடந்து கொள்கிறார். ஏதாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துட்டு இந்த ஆட்டம் போட்டா தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் நடிக்கிற படம் எல்லாம் புஸ்வானம் ஆகும் போது வெற்றி கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கணும். இவரை எம்எஸ் பாஸ்கரும் செம நடிகர், நல்லா வருவார் என்று சொல்வது தான் ஆச்சரியம்.

Also Read: திறமை இருந்தும் 35 வருடம் போராடி பெற்ற அங்கீகாரம்.. கமலை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்

Trending News