தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிக்க மறுத்த ஹிட்டான படங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய்யும் இடம் பிடித்துள்ளனர். முதல்வன் படத்தில் நடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் படத்தில் நடிப்பதற்கு என்று பல நடிகர்கள் வரிசைகட்டி நிற்கும் நேரத்தில் ஷங்கர் படத்தில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளனர்.
முதல்வன் படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்குவதாக இருந்துள்ளார். ஆனால் முதல்வன் படத்தில் நிறைய அரசியல் சம்பந்தமான காட்சிகள் இருப்பதால் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு மறுத்துள்ளார்.

அதற்கு காரணம் ரஜினிகாந்த் சினிமாவில் ஓரளவுக்கு நல்ல பெயர் பெற்று வந்தார். அதனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
ரஜினிகாந்திற்கு பிறகு விஜய் படம் தான் அதிக வரவேற்பை பெற்று வந்தது. அதனால் ரஜினிகாந்திற்கு அடுத்து ஷங்கர் முதல்வன் படத்தில் விஜய் வைத்து இயக்குவதாக முடிவு செய்து கதையை கூறியுள்ளார்.
ஆனால் முதல்வன் படம் அரசியலை மையமாகக் கொண்டது. விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் திமுகவின் ஆதரவாளராகயிருந்த சமயம் அதுமட்டுமில்லாமல் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கதை இருப்பது போல் இருந்ததால் முதல்வன் படத்தில் விஜய் நடிக்க மறுத்துள்ளார்.
ஆனால் முதல்வன் படம் வெளியாகி அர்ஜுன் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இன்றும் பார்க்கப்படுகிறது. தற்போது வரை ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரும் இந்த மாதிரி கதையில் நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.