Mufasa-The Lion King Movie Review: கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தி லயன் கிங் ரசிகர்களை பெருமளவில் ரசிக்க வைத்தது. உலக அளவில் கொண்டாடப்பட்ட படத்தில் நாம் சிம்பாவின் வாழ்க்கை பற்றி பார்த்தோம்.
இதில் சிம்பாவின் அப்பாவான முஃபாசாவின் வரலாறு காட்டப்பட்டிருக்கிறது. கதைப்படி சிறுவயதில் முஃபாசா ஒரு வெள்ளப்பெருக்கால் தன் பெற்றோர்களை பிரிந்து விடுகிறான்.
குட்டி பையன் ஆன முஃபாசாவை டாக்கா காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். அங்கு இருவரும் அண்ணன் தம்பிகள் போல் வளர்கிறார்கள்.
அந்த சமயத்தில் வெள்ளை சிங்க கூட்டம் மூலம் ஆபத்து வருகிறது. அதை தடுக்க முஃபாசா டாக்கா இருவரும் செல்கின்றனர். இதற்கு இடையில் டாக்கா விரும்பும் பெண் சிங்கம் முபாஸ்ஸாவை விரும்புகிறது.
இதனால் டாக்கா கோபமடைந்து முபாஸ்ஸாவுக்கு எதிராக மாறுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை முஃபாசா எப்படி அமைத்தான் என்பதுதான் படத்தின் கதை.
தி லயன் கிங் அளவுக்கு மாஸ் காட்டியதா முஃபாசா
எப்போதுமே ஹாலிவுட் அனிமேஷன் படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் விஷுவல் ட்ரீட் தான்.
அதிலும் இந்த முறை தமிழ் ரசிகர்களுக்கு ஏக கொண்டாட்டம். ஏனென்றால் நாசர், அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி என பலர் இதற்காக குரல் கொடுத்துள்ளனர்.
அதிலும் நாசரின் குரல் அவ்வளவு கம்பீரமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. அதேபோல் பல காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
ஆனால் தி லயன் கிங் படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இதில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஏனென்றால் அந்த படம் முழுக்க நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தது.
அதே சமயம் அடுத்தடுத்த காட்சிகள் பெரும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இதில் சொல்லிக் கொள்ளும் படியான சில காட்சிகள் மட்டும் தான் ஆரவாரபடுத்தி இருந்தது.
அதன்படி நிறை என்று பார்த்தால் திரைக்கதை, VFX, பின்னணி குரல், படத்தில் சொல்லப்பட்ட மெசேஜ் நன்றாக இருக்கிறது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தால் சாகச காட்சிகள் குறைவாக இருப்பது மைனஸ் ஆகியிருக்கிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால் குழந்தைகள் ரசிக்க கூடிய படம் தான் இந்த முஃபாசா.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5