புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரம்மாண்டமாக நடக்கும் 2வது ப்ரீ வெட்டிங்.. மகனுக்காக பல நூறு கோடிகளை வாரி இறைக்கும் அம்பானி

Anant Ambani: நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கடந்த மார்ச் மாதம் இவர்களின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதற்கு ஒட்டு மொத்த பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் ரஜினி, அட்லி என நம்ம ஊரு பிரபலங்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.

மேலும் உலக பணக்காரர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் அதில் கலந்து கொண்டனர். இதற்காகவே பல ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட செட் அமைத்திருந்த அம்பானி விருந்து உபசரிப்பையும் தடபுடலாக நடத்தி இருந்தார்.

இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வுக்கு மட்டுமே கிட்டதட்ட 1250 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்திருந்தார். அதையடுத்து நாளை 2வது ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த முறை சொகுசு கப்பலில் இதை அவர் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங்

அதன்படி ஆடம்பரமான பயண கப்பலில் தான் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. இத்தாலியில் தொடங்கும் இந்த பயணம் தெற்கு பிரான்சிலில் முடிவடையும். இதற்கு இடைப்பட்ட தூரம் என்று பார்க்கையில் கிட்டத்தட்ட 4380 கி.மீ ஆகும்.

இதற்கு பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் என சுமார் 800 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென அக்கப்பலில் பல வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்காகவே 600 பணியாளர்கள் இருக்கிறார்களாம். இப்படியாக அம்பானி தன் மகனின் திருமண வைபோகத்தை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

ப்ரீ வெட்டிங் நிகழ்வே இப்படி என்றால் திருமணம் எந்த அளவுக்கு இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் பல பிரபலங்கள் வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு காசை வாரி இறைக்கும் அம்பானி

Trending News