விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை ஜோடிகென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் சீரியல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இன்னிலையில் கண்ணனுக்கு உதவும் நோக்கத்தில் கதிர், மூர்த்தி இடம் தொடர்ந்து மாட்டிக்கொண்டு திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். எனவே ‘எந்தத் தப்பும் செய்யாமல் கதிர் திட்டு வாங்குவதை பார்க்கமுடியாத முல்லை என்ன நடந்தது என்று உண்மையை மூர்த்தி மாமாவிடம் சொல்லிவிடுங்கள். இல்லை என்றால் நான் போய் சொல்லி விடுவேன்’ என்று கதிரை முல்லை வற்புறுத்துகிறார்.
ஆனால் தம்பிக்காக திட்டு வாங்குவது பரவாயில்லை என்று கதிர் பெருந்தன்மையாக பேசுவது, முல்லைக்கும் மேலும் கோபத்தை தூண்டுகிறது. இதனால் காண்டேறிய முல்லை பிறந்த வீட்டுக்கு பொட்டியை கட்டி கிளம்பத் தயாராகி விட்டார்.
இருப்பினும் கதிர் முல்லையை சமாதானம் செய்தாலும் அவர் சமாதானமாக தயாராகவில்லை. இவ்வாறு கதிர்-முல்லை இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக்காட்சிகளும் பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது என்பது ரசிகர்களின் கருத்து.
கடந்த சில நாட்களாக தான் முல்லை-கதிர் இடையில் காதல் ட்ராக் ஓடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று இவர்கள் சண்டை போடுவது கதையின் போக்கை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
எனவே முல்லை சமாதானமாகி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலேயே இருப்பாரா? இல்லை அவருடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி விடுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.