ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே நாளில் ஃபேமஸ் ஆக பிளான் போட்ட முல்லை.. திருடர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மருமகள்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து வாழ துடிக்கும் கதிர்-முல்லை இருவரும் புதிதாக துவங்கிய ஹோட்டல் தொழிலில் எப்படியாவது லாபம் பார்த்து விட, பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்காக கதிர் புரோட்டாவை எல்லாம் தூக்கி போட்டு வித்தைகளை காட்டிய வீடியோ ஃபேமஸ் ஆனாலும், தொழில் மட்டும் சூடு பிடிக்கவில்லை. இருப்பினும் தற்போது நியூஸ் பேப்பரில் ஒரு விளம்பரத்தை பார்த்துவிட்டு கதிருக்கு முல்லை ஒரு யோசனை சொல்கிறார்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா? காவியா வெளியேற காரணம் இதுதான்

குறிப்பிட்ட நேரத்தில் சுவையாக சமைத்து கொடுத்தால் 10 லட்சம் பரிசு. அந்தப் போட்டியில் கதிரை கலந்து கொள்ள முல்லை சொல்கிறார். இதற்கு ஒத்துழைக்காத கதிர், ஹோட்டல் தொழிலில் செய்த வித்தைகள் எடுபடாத நிலையில் இந்த போட்டியில் மட்டும் எப்படி ஜெயித்துவிடுவோம் என்று நெகட்டிவ்வாக பேசுகிறார்.

ஆனால் முல்லை இந்த போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் நாம் கொடுக்க வேண்டிய 5 லட்சத்தை கொடுத்து விட்டு, மீதமிருக்கும் 5 லட்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிதாக கட்டும் வீட்டிற்கும் உபயோகமாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

Also Read : 6 மாசம் என்னோட உறவிலிருந்த, உன் ரேஞ்சே வேற.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்

இதன்பிறகு கதிர் இதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து அந்த போட்டியில் கலந்து கொள்ளவும் தயாராக போகிறார். மறுபுறம் கொடைக்கானலுக்கு சென்று வந்த குடும்பம் வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல், ஜீவா-மீனா இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவும் பத்தாது பின்வாசல் கதவை திறந்து போட்டு தூங்கியதால், வீட்டிற்கு வந்த அண்ணனிடம் ஜீவா ‘பொறுப்பில்லாமல் இப்படியா நடந்து கொள்வது’ என வாங்கிக் கட்டிக் கொள்கிறார். மேலும் எங்கள் வீடு திறந்து கிடக்கிறது யாரு வேண்டுமானாலும் திருடி கொள்ளலாம் என திருடர்களுக்கு மீனா ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் குடும்பத்தினர் கழுவி ஊற்றினார்கள்.

Also Read : அழுகையும் சிரிப்புமாக அனல் பறந்த பிக் பாஸ் வீடு.. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற 9வது நாள்

Trending News