ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மாஸ்டர் பட நடிகருடன் ஜோடி போடும் முல்லை.. சீரியலில் கிடைத்த பேராதரவு சினிமாவில் கிடைக்குமா!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை காவியா அறிவுமதி. இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அவ்வபோது இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

எனவே நயன்தாரா போலவே மேக்கப் போட்டுக் கொண்டும், அவர் நடித்த காட்சிகளை அப்படியே நடித்து வீடியோ போட்டதன் மூலம் ‘குட்டி நயன்தாரா’ என இன்ஸ்டாகிராமில் புகழப்படும் காவியா அறிவுமதி தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அதுவும் மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டிய மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக ‘ரிப்பப்பரி’ என்ற படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தை அருண் கார்த்திக் இயக்குகிறார்.

எனவே இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியீட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தப்படத்தில் கதாநாயகியாக காவியா அறிவுமதி நடிக்க உள்ளது ரசிகர்களிடையே இந்தப் படத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் சிறந்து விளங்கி மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரனுக்கும், சீரியல் நடிகை காவியா அறிவு மதிக்கும் ரிப்பப்பரி  திரைப்படம் திருப்புமுனையாக அமைய உள்ளது.

மேலும் ரிப்பப்பரி படத்தை குறித்த முழு தகவல் இனிவரும் நாட்களில் படக்குழு வெளியிடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அத்துடன் சின்னத்திரையில் காவியா அறிவுமதிக்கு கிடைத்த சப்போர்ட் வெள்ளித்திரையிலும் கிடைக்குமா என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News