புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை பட்டா இப்படித்தான்.. ஐஸ்வர்யாவை உருட்டி எடுத்த முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது அண்ணன் தம்பிகள் ஒன்று கூடும் நேரம் வந்துவிட்டது. இவர்களின் ஒற்றுமையான பாசத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. கதிர் போலீஸிடம் மாட்டிக் கொண்டார். இதற்கு காரணம் முழுக்க முழுக்க ஐஸ்வர்யா கண்ணன் இவர்களின் பேராசையால் தான் கதிர் தற்போது தண்டனை அனுபவிக்கிறார்.

இதைத் தெரிந்த ஜீவா மற்றும் மூர்த்தி போலீஸ் ஸ்டேஷன் சென்று கதிரை பார்த்து மிகவும் வருத்தம் அடைகிறார். பின்பு ஜீவா, மூர்த்தியிடம் கதிரை இப்படி பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இன்னைக்கு குள்ள எப்படியாவது அவனை வெளியில் எடுக்கணும் அதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்கிறேன் என்று சொல்கிறார்.

Also read: ரெண்டு பொண்டாட்டி வாழ்க்கையில் படாத பாடுபடும் கோபி.. இப்போ ராதிகா நிலைமை என்ன

இது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் இன்னும் அந்த திமிரோடு தான் இருக்கிறார். ஆனால் நம்ம மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் ஐஸ்வர்யாவின் சித்தி நல்ல நாளு கேள்வி கேட்டுட்டாங்க. இப்பதான் கொஞ்சமாவது நம்முடைய மனதில் இருக்கும் பாரம் குறைந்தது போல் இருக்கிறது.  கதிர் இந்த நிலைமைக்கு காரணமான ஐஸ்வர்யாவை, முல்லை எல்லா கோபத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக பதம் பார்க்கப் போகிறார்.

கொஞ்சம் ஆட்டமா போட்டா என்ன ஆட்டம் கடன்ல எல்லா பொருட்களையும் வாங்கி என்னமோ இவ சொந்தமா வேலைக்கு போய் சம்பாதித்து வாங்குனது போல் என்ன ஆட்டம். அதான் சரியான நேரத்தில் பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டாங்க. இருக்குறத வச்சு ஒழுங்கா வாழவில்லை என்றால் இந்த நிலைமைதான் ஆகும். இது என்னதான் நாடகமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் எங்கயோ இதெல்லாம் நடக்கிறதுனால் தான் இப்படி கொண்டு வராங்க.

Also read: என்ன நடிப்பு? நீலி கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. கரிகாலனை பதம் பார்த்த சக்தி

ஆனால் இந்த கலகம் ஏற்பட்டதனால் மறுபடியும் அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து கூட்டுக் குடும்பமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறப்போகிறது. ஆனாலும் இன்னும் அதிகமாகவே இந்த ஐஸ்வர்யா பட வேண்டும் என்ற தோன்றுகிறது. இருக்கிறத விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டு கடைசியில் அடி வாங்கினது தான் மிச்சம்.

கதிரை எப்படியும் ஜீவா மூர்த்தி வெளியே எடுத்து விடுவார்கள். இதன் பிறகு ஐஸ்வர்யா திருந்தி கூட்டு குடும்பமாக அனுசரித்து வாழ்ந்தால் இனிமேலாவது சந்தோஷமாக வாழ முடியும். அதை விட்டுப் போட்டு தனியாக இருந்து முன்னேற்றி காட்டுவேன் என்று கண்ணனை படுகுழியில் தள்ளாமல் இருந்தால் நல்லது.

Also read: ஒட்டு மொத்த குடும்பத்தையும் லாக் செய்யும் குணசேகரன்.. அருண் கதை இதோடு முடிஞ்சது போல

Trending News