வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முள்ளும் மலரும் மகேந்திரனின் 5 தரமான படங்கள்.. அடேங்கப்பா! ரஜினிக்கு மட்டும் இத்தனை ஹிட் படங்கள்

Actor Rajini and Director Mahindran: இயக்குனர் மகேந்திரன் என்பவர் பல படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் பல பரிமாணங்களில் இவருடைய அர்ப்பணியை சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ரஜினிக்கு மட்டும் அதிகமான ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு ஜானி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஸ்ரீதேவி, சுருளிராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, ஜானி மற்றும் வித்யாசாகர் என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் ஒரே உருவமாக இருந்தாலும் இரண்டு பேரும் வெவ்வேறு திசையில் ஓடுவதை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

Also read: திருப்தி படுத்தாத சினிமா, 13 வருடத்தில் பல ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியை தூக்கி சாப்பிட்ட அரவிந்த்சாமி

கை கொடுக்கும் கை: மகேந்திரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு கை கொடுக்கும் கை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ரேவதி, விஎஸ் ராகவன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி நடிப்பு வித்தியாசமாகவும், தனது மனைவிக்கு நடந்த வன்கொடுமையை எப்படி எதிர்த்துப் போராடுகிறார் என்பதை மையமாக காட்டிய படமாகும்.

காளி: சசிதரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு காளி திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இப்படத்தின் மூலத் திறக்கதையை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். இதில் ரஜினி, விஜயகுமார், சிரஞ்சீவி, சீமா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க சண்டையே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் ரஜினி நடிப்பு மிகப் பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு இப்படம் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

Also read: ரஜினியை ஒருமையில் பேசி வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை.. உங்க வயசுக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லையா!

உதிரிப்பூக்கள்: மகேந்திரன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு உதிரிப்பூக்கள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயன், மது மாலினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஒரு கிராமத்தை துன்புறுத்தும் ஒரு கொடிய மனிதனை மையமாக வைத்து வெளிவந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.

முள்ளும் மலரும்: மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, சரத்பாபு, ஜெயலட்சுமி, ஷோபா, வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, தங்கை மேல் அளவு கடந்த பாசம் வைத்துக் கொண்டு இவரின் வாழ்க்கைக்காக போராடுவதை படமாக்கப்பட்டிருக்கும். அத்துடன் இப்படத்தில் சரத்பாபு ரஜினியின் தங்கையை காதலித்து வருவார். இவருடைய காதலுக்கு சம்மதம் கொடுக்காமல் ரஜினி முரண்டு பிடிக்கும் விதமாக இக்கதை அமையும்.

Also read: உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி

Trending News