தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தவர் நடிகர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் பல படங்கள் வெள்ளி விழா கண்டது. அதில் ஒன்றுதான் முந்தானை முடிச்சு.
பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய படம். அந்த படத்தின் மிக முக்கிய வெற்றிக்கு காரணம் பாக்கியராஜ் வேலை செய்யும் பள்ளியில் வரும் டீச்சர் தான்.
வயதானவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அந்த காட்சி இன்றளவும் ரசிகர்களின் பேவரைட். கிளாமர் குயினாக வலம் வந்த டீச்சரின் பெயர் உன்னி மேரி. இந்திய சினிமாவில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் ஒரு காலத்தில் கலக்கினார்.
கிளாமர் நாயகியாகவே பெரிதும் வெற்றி கண்டார். அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த உன்னி மேரி, 59 வயதில் ஆளே அடையாளம் தெரியாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் கவர்ச்சியால் இந்திய சினிமாவையே கலங்கடித்த நடிகை உன்னி மேரி ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு நிர்மல் ரிஜாய் என்ற ஒரு மகன் உள்ளார்.
வயதான நடிகைகள் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது உன்னி மேரிக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டாராம்.