இப்போது டிவி நிகழ்ச்சிகளை போலவே பல்வேறு யூடியுப் சேனல்களும் அவர்கள் வைத்திருக்கும் ஃபாலோவர்களை பொறுத்து சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அவ்வப்போது யாரேனும் ஒரு பிரபலத்தை பேட்டி எடுத்து அவர்களின் சொந்த கருத்துக்களை யூடியூப்பில் வெளியிடுவார்கள். அப்படியாக சினிமா,அரசியல் என இரண்டையும் வெளுத்து வாங்கும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை பேட்டி கண்டனர்.
அந்த பேட்டியில் சரளமாக கமல், ரகுவரன், முரளி, அதர்வா என அனைவரையும் பற்றி பேசி இருக்கிறார் பயில்வான்.
ரகுவரன் மாஸான வில்லன் நடிகர் அப்போதய காலகட்டத்தில் அவருடன் நடிக்க ஹீரோக்கள் பலரும் ஆசைப்பட்ட தருணத்திலும் கமலஹாசனோடு ஏன் நடிக்கவே இல்லை என்கற கேள்விக்கு தெளிவாக பதிலளித்திருந்தார்.
கமலஹாசன் எத்தனை படங்கள் நடித்தாலும் இறுதிகட்ட பணியான எடிட்டிங்கில் கமலஹாசனின் தலையீடு இருக்கும் என்றும் படத்தின் சீன்களில் இருக்கும் தேவையற்ற எமோசன்களை தேவையற்ற கேரக்டர்களின் மீது மக்கள் பார்வை நேரடியாக விழாதவாறு பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார்.
பொதுவாக பார்த்தால் கமலை ரகுவரன் ஒதுக்கவில்லை ரகுவரனுடன் நடிக்க கமல் விரும்பவும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும் நடிகர் முரளி மற்றும் அவர் மகன் அதர்வா குறித்தும் கூறியிருந்தார்.
நடிகர் முரளி திரையில் காதலித்து திருமணம் செய்ததாகவும் அதர்வா திரையில் காதலிப்பதோடு சரி என்றும் குறிப்பிட்டிருந்தார். இவர் சொல்வதைப் பார்க்கும்போது அதர்வா நடிகைகளுடன் சரியாக நடந்து கொள்வதில்லை என தெளிவாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் ரகுவரனும் சரி முரளியும் சரி அவர்தம் போதை பழக்கங்களை விட்டிருந்தால் இப்போதும் கூட அவர்களின் புகழ் உச்சியில் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ரகுவரனோடு திருமணம் செய்து வாழ்ந்த ரோகிணி ரகுவரனுடனான வாழ்க்கை பிரிவுக்கு பிறகும் கூட அவரைப்பற்றி தவறாக பேசியதில்லை எனறும் ரகுவரனும் ரோகிணி பற்றி யாரிடமும் பேசியதில்லை என்றும் சரியான புரிதலோடு பிரிதலும் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பயில்வான் எல்லா விடயங்களிலும் பயில்வானாக செயல்பட்டு பல்வேறு நபர்கள் மீதான அவரது பார்வையை தெளிவுபடுத்தி இருப்பார்.