சுந்தரா ட்ராவல்ஸ் 2 ஆன் தி வே.. முரளி-வடிவேலு கேரக்டரில் நடிக்க போறது யாரு தெரியுமா?

Sundara Travels
Sundara Travels

Vadivelu: முரளி மற்றும் வடிவேலுவின் காமெடி கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பிய படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். முரளி என்றாலே ஒரு தலை காதல், காதலில் உருகி வழிவது என்று தான் அவரை பார்த்திருக்கும்.

அவரை படம் முழுக்க காமெடி ஹீரோவாக காட்டியது சுந்தரா ட்ராவல்ஸ் படம் தான்.

அப்பா அம்மா இல்லாத முரளி மற்றும் வடிவேலு ஒரு பஸ்ஸிலேயே தங்களுடைய வாழ்க்கையை நடத்துவது, அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என முழுக்க காமெடி காட்சிகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

சுந்தரா ட்ராவல்ஸ் 2 ஆன் தி வே

முரளிக்கு வடிவேலுவுடன் காமெடி பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகிவிடும். அந்த மேஜிக் தான் இந்த படத்திலும் நடந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் பட குழு ஈடுபட்டு இருக்கிறது. நடிகர் முரளி மறைந்து விட்ட நிலையில், வடிவேலுவும் இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த படத்தில் கருணாஸ் மற்றும் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சுந்தரா ட்ராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என்னும் பெயரில் இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement Amazon Prime Banner