வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சொகுசாக வாழ நினைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. பில்லை பார்த்த உடனே மூர்த்திக்கு வந்த நெஞ்சுவலி

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பம் பண்ணும் அக்கப்போரால் மூர்த்தி விழி பிதுங்கி நிற்கிறார். அதாவது இந்த தொடரில் மூத்த அண்ணியாக இருக்கும் தனத்திற்கு கேன்சர் பிரச்சனை இருப்பது குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்கள்.

அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவை தான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற முடிவெடுத்து இருக்கிறார்கள். இதனால் உப்பு, காரம் இன்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தினமும் சாப்பிட்டு வருகிறார்கள். இவர்களின் பாசத்திற்கு அளவே இல்லையா என்று நினைக்கும் படி தான் இப்போது காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read : விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு போனது இதுக்கு தானா?. மட்டமான வேலை செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஏசி வைத்தால் நன்றாக இருக்கும் என பேச்சு ஏற்படுகிறது. அப்போது மூர்த்தி நான்கு அண்ணன், தம்பி இருப்பதால் நான்கு ரூமிலும் ஏசி மாட்டி விடலாம் என்று முடிவெடுக்கிறார். இதனால் கரண்டு பில் அதிகமாகும் என்ற பேச்சு போனாலும் எவ்வளவு நான்காயிரம் தான் ஆகும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று நான்கு ஏசி வாங்கி விடுகிறார்கள்.

இவ்வாறு சொகுசாக வாழ நினைத்து நான்கு ரூமிலும் ஏசி எப்போதுமே ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த மாதத்திற்கான கரண்டு பில் வந்துள்ளதாக கதிர் மூர்த்தியிடம் காட்டுகிறார். அதாவது கிட்டதட்ட 28 ஆயிரம் வந்திருப்பதால் மூர்த்திக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது. இனிமேல் ஒன்றரை மணி நேரத்திற்கு அதிகமாக யாரும் ஏசி போடக்கூடாது என மூர்த்தி கண்டிஷன் போடுகிறார்.

Also Read : குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சின்ன வீட்டில் இயற்கை காற்றில் மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள். இப்போது பெரிய பங்களா கட்டிய உடன் ஆடம்பர வாழ்க்கைக்காக ஏசி வைத்து சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை என்ற பெயரில் இவ்வாறு கதையை உருட்டி வருவது ரசிகர்களுக்கு எரிச்சல் அடையச் செய்கிறது.

தனத்திற்கான சிகிச்சை அளித்து சரி செய்து விட்டால் இந்தத் தொடர் முடிவு பெற்றுவிடும். ஆனால் இதையே இழுவையாக இயக்குனர் இழுத்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பார்க்க அலுப்பு தட்டி விடுகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதால் விரைவில் இந்த தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரகசியமாக விஜய் டிவி பிரபலத்துடன் 2வது திருமணம் செய்த நடிகை.. புடிச்சாலும் புடிச்ச புளியங்கொப்பை

Trending News