வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய்யுடன் சண்டை.. அஜித் பக்கம் தாவ 20 வருடம்.. பஞ்சாயத்து பேச கூப்பிடும் ஏ ஆர் முருகதாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவருக்கும் அவர்களது கேரியரில் முக்கிய கட்டத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவர்களின் சினிமா மார்க்கெட்டை உயர்த்தியதில் முருகதாசுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

தல அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம்தான் இயக்குனராக ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல்படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய காலகட்டங்களில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்த சூர்யாவுடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றினார் முருகதாஸ்.

பின்னர் சூர்யா மற்றும் அஜித் ஆகிய இருவரையும் விட விஜய் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார் என அவருடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றினார். நான்காவது முறையாக கூட்டணி போட நினைத்து பழைய படக் கதையை பட்டி டிங்கரிங் பார்த்து கொண்டுபோனதை விஜய் கண்டுபிடித்து விட்டார் போல.

உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனரை விஜய் மாற்றிவிட்டார். இதன் காரணமாக தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிய கொண்டிருக்கிறார் ஆர் முருகதாஸ். தற்போது இருக்கும் நிலையில் முருகதாஸ் முன்னணி நடிகர்களை தவிர இரண்டாவது கட்ட நடிகர்களுடன் படம் பண்ண முடியாது.

அது அவரது கேரியரை பதம் பார்த்து விடும் என்பது அவருக்கே தெரியும். இடையில் சிவகார்த்திகேயனை வைத்து படம் செய்யலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் யாரோ உள்ளே புகுந்து சோலி முடிந்து விடும் என்று கூறியதால் மீண்டும் முன்னணி நடிகர்ளுக்கு வலை வீச தொடங்கியுள்ளார்.

இப்போதைக்கு விஜய் பக்கம் செல்ல முடியாது என ஏற்கனவே சூர்யாவுக்கு ஒரு பக்கம் வலை வீசியுள்ளார். சூர்யா தொடர்ந்து சில வருடங்கள் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் தற்போதைக்கு அடுத்து ஃப்ரீயாக இருக்கும் நடிகர் என்று பார்த்தால் அது தல அஜித் தான்.

ar-murugadoss-cinemapettai
ar-murugadoss-cinemapettai

ஆனால் அஜித்துக்கும் முருகதாசுக்கும் ஏற்கனவே 20 வருட பஞ்சாயத்து உள்ளது. தற்போது சண்டையை மறந்து அஜீத்துடன் படம் செய்ய ரெடி என முருகதாஸ் கோலிவுட் வட்டாரத்தில் தூதுவிட்டுள்ளாராம். இது எப்படியாவது அஜித் காதில் விழுந்து தம்மை அழைத்துக் கதை கேட்க வேண்டும் என தினமும் வேண்டாத சாமி இல்லையாம்.

Trending News