ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

Kamal: சல்மான் கான் கொடுக்கும் ஓவர் டார்ச்சர்.. கமலால் மத்தளம் போல் அடிவாங்கும் முருகதாஸ்

சிவகார்த்திகேயன், ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஏற்கனவே பூசணிக்காய் உடைத்த போதிலும் சிவகார்த்திகேயனை விடும் ஐடியாவில் படக்குழுவினர்கள் இல்லை. சின்ன சின்ன விட்டுப்போன காட்சிகளுக்கு அவரை அழைத்து இம்சை கொடுக்கிறார்கள்.

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தொடங்கி விட்டார். இந்த படத்தில் முற்றிலும் சிவகார்த்திகேயன் வேறு ஒரு மாதிரியான கோணத்தில் நடிக்கவிருக்கிறார். பழைய படங்களின் சாயல் கொஞ்சம் கூட இதில் இருக்காதாம். இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஈவிபியில் நடக்கிறது

கமலால் மத்தளம் போல் அடிவாங்கும் முருகதாஸ்

கமல் அடிக்கடி சிவகார்த்திகேயனை அமரன் படத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த படத்தின் கெட்டப் வேறு, இந்த படத்தில் உள்ள கெட்ட வேறு. அதனால் ஏ ஆர் முருகதாஸ் அதிருப்தியில் இருக்கிறார். இதற்கிடையே சல்மான் கான் முருகதாஸிற்கு ஓவர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏ ஆர் முருகதாஸை படத்தை முடித்துவிட்டு வாருங்கள் இல்லை என்றால் நான் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவேன் என சல்மான்கான் வார்னிங் கொடுத்துள்ளார். இப்பொழுது கடைசியாக 20 நாட்கள் கொடுத்திருக்கிறார்.
ஹாலிவுட் பயில்வான் சல்மான்.

தமிழில் முருகதாஸ் எடுத்த கடைசி படம் தர்பார். இந்த படம் அவருக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் பெரிய அடியாக அமைந்தது. ரஜினியின் கேரியரில் சம்பளம் குறைக்கும் அளவிற்கு இந்த படம் அவருக்கு ஒரு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்பொழுது முருகதாஸ், சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் படத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்

Trending News