முருகதாஸ் விஜய் கூட்டணியில் நான்காவது முறையாக ஒரு படம் உருவாகிறது என்ற சந்தோஷமாக இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விஜய்யே அந்த படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தின் முதல் இயக்குனர் முருகதாஸ் தான். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை, இரண்டாம் பகுதியில் செம சொதப்பலாக இருந்ததால் விஜய் அந்த கதையை நிராகரித்து விட்டார்.
தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் என்பவருடன் இணைந்து விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. ஆனால் விஜய்க்கு எழுதிய அதே கதையை வைத்துக்கொண்டு பல முன்னணி நடிகைகளிடம் கதை சொல்லி வந்தார் முருகதாஸ்.
ஆனால் தமிழில் எந்த ஒரு நடிகரும் அவரது கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இவ்வளவு ஏன் பல நாட்களாக சண்டையில் இருக்கும் சூர்யா மற்றும் அஜித்திடம் கூட அந்த கதையை கூறியதாக கோலிவுட்டில் கூறுகின்றனர்.
இந்த நேரத்தில்தான் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் முருகதாஸ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளாராம். இதனை அல்லு அரவிந்த் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் வாசு என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது புஷ்பா படத்தில் பிஸியாக இருக்கும் அல்லு அர்ஜுன் அந்த படத்தை முடித்த பிறகு, மேலும் 2 படங்களில் நடித்துவிட்டு மூன்றாவதாகத் தான் முருகதாஸ் படத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். அதுவரை முருகதாஸ் பொறுமை காப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.