புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனை கழட்டி விட்டுட்டு சூர்யாக்கு முருகதாஸ் வீசிய தூண்டில்.. துண்டு போட்ட உதயநிதி

சிவகார்த்திகேயனின் அமரன் படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகிறது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் இப்பொழுது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்சமயம் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வந்தார் சிவா. இப்பொழுது அவருக்கு ஒரு நீண்ட பிரேக் கொடுத்துள்ளனர். அமரன் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் செய்வதற்காக சிவகார்த்திகேயனுக்கு லீவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தை வீணடிக்காமல் முருகதாஸ் இன்னொரு படத்திற்காக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். அது ஏற்கனவே வெளிவந்த படத்தின் இரண்டாம் பாகமாம். சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா நடித்து மாஸ் ஹிட்டான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் முருகதாஸ்.

ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் இறந்துவிட்டார். இப்பொழுது தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கிவிட்டார் முருகதாஸ். கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அஸ்திவாரம் போடவிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு பிறகு இந்த ப்ராஜெக்ட்டை சூர்யா கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருகதாஸ் இந்த படத்தை தயாரிப்பதற்காக உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார். கஜினி முதல் பாகம் நல்ல ஒரு வசூலை பெற்று தந்ததால் நிச்சயமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிப்பதற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News