வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய்யுடன் பஞ்சாயத்து.. 8 வருட சண்டையை மறந்து முன்னணி நடிகருடன் கூட்டணி போடும் முருகதாஸ்

தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென படத்தின் இயக்குனரை விஜய் மாற்றியது முருகதாஷுக்கு பேரதிர்ச்சியை கொடுத்ததாம்.

முருகதாஸ் அரைத்து புளித்துப்போன கதையை மீண்டும் பட்டி டிங்கரிங் செய்து விஜய்யிடம் கூறியதால் விஜய்க்கு அதில் முழு திருப்தி இல்லை எனவும், அதன் காரணமாகவே டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் முருகதாஸ் தற்போது அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஒரு அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

சமீபத்தில்கூட முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக வந்த தகவலை சிவகார்த்திகேயன் இல்லை என கூறிவிட்டார். அடுத்ததாக முருகதாஸ் தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்குவார் எனவும் சினி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். சர்கார் மற்றும் தர்பார் போன்ற படங்கள் சரியாக செல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

suriya-murugadoss-cinemapettai
suriya-murugadoss-cinemapettai

சூர்யா ஏற்கனவே சூர்யா 40, வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என தொடர்ந்து பிசியாக இருப்பதால் இந்த படங்களை எல்லாம் முடிந்த பிறகு முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம். சூர்யாவின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் சூர்யா வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Trending News