ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

திரும்பி கூட பார்க்காத விஜய்.. எதற்கும் அசராமல் 400 கோடி படத்தை வளைத்த ஏஆர் முருகதாஸ்

Director AR Murugadoss : ஏஆர் முருகதாஸ் விஜய்யின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கதை திருட்டு மற்றும் சம்பள பிரச்சனை போன்ற விஷயங்களில் ஏஆர் முருகதாஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் வைத்து ஏ னஆர் முருகதாஸ் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இதனால் வருகின்ற மே மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் இப்படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்க உள்ளார். அதோடு அதிக ஆக்சன் காட்சிகளுடன் இந்த படம் உருவாக உள்ள நிலையில் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாம்.

Also Read : நடிகர்களின் ஓட்டை கவர ஒரு கோடியை தூக்கி கொடுத்த விஜய்.. பக்கா அரசியல்வாதியாக மாறிய தளபதி

போர்ச்சுக்கல், ஐக்கிய அரபு நாடுகளில் இந்த படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஏஆர் முருகதாஸுக்கு இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் கொடுப்பதுடன் சரியான கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் படம் இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.

அந்தப் படத்தை முடித்த கையோடு சல்மான்கான் படத்திற்கான வேலையை முருகதாஸ் தொடங்கி விடுவார். தளபதி விஜய்யின் பட வாய்ப்பு கைநழுவி போனாலும் பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் படத்தின் வாய்ப்பு இப்போது முருகதாஸை தேடி வந்துள்ளது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Also Read : விஜய்யின் அரசியல் விளம்பரத்தை தடுத்த அஜித்.. இயற்கையாகவே இது நடந்து விட்டது..!

Trending News