வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஜிவி பிரகாஷ் கைவசம் இருக்கும் 8 படங்கள்.. 3 வருஷத்துக்கு மியூசிக் பக்கமே போக முடியாது போலையே

GV Prakash upcoming movies list: ‘வெயிலோடு விளையாடி’, ‘வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாய்ங்களா’ போன்ற பாடல்கள் 90ஸ் கிட்ஸ்களை உருக வைத்தவை. ஜிவி பிரகாஷ் லாம் நடிக்க போனதால தான் அனிருத்துக்கு இப்படி ஒரு வளர்ச்சின்னு இன்னும் அங்கலாய்த்து கொண்டு இருக்கிறோம். ஆனா தலைவன் நம்ம ஏக்கத்த புரிஞ்சிக்காம ஆக்ட்டிங்ல பிசியா இருக்குறார். இப்போ கூட ஜிவி கைவசம் எட்டு படங்கள் இருக்குதாம். அந்த படங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷ் கைவசம் இருக்கும் 8 படங்கள்

ரெபெல்: நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் ரெபெல். இந்த படத்தில் ஜிவி கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். கேரள கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவனின் கதையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு இடையே வெறுப்பை விதைப்பது தான் இந்த படத்தின் கதை.

காதலிக்க யாரும் இல்லை: அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் தான் காதலிக்க யாரும் இல்லை. முழுக்க முழுக்க இளமை துள்ளலுடன் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.

பாட்ஷா என்கிற ஆண்டனி: இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் படம் பாட்ஷா என்கிற ஆண்டனி. இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களை பற்றி இதுவரை எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

4G: இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில் ஜிவி ப்ரகாஷ் நடிக்கும் படம் 4ஜி. இந்த பட வேலைகள் கடந்த 2017 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. இது ஒரு காதல் ரொமான்டிக் கலந்த பேண்டஸி திரைப்படம் ஆகும்.

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்: இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜனனி இணைத்து நடிக்கும் படம் ராமனின் மோகனம் ஜானகிமந்திரம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இடிமுழக்கம்: மண் வாசம் வீசும் படங்களை அள்ளி தரும் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி ப்ரகாஷ் நடிக்கும் படம் தான் தூரத்து இடிமுழக்கம். இந்த படத்தில் காயத்ரி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கிராமத்து பின்னணி கொண்ட ஆக்சன் திரைப்படம் இது.

கள்வன்: இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் தான் கள்வன். இவானா, பாரதிராஜா, விஜய் டிவி தீனா, முனைவர் ஞானசம்பந்தம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

டியர்: இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் டியர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். திருமணமான புது மண தம்பதிகளுக்கிடையே குறட்டை எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

Trending News